ஐபிஎல் போட்டியில் சென்னை அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின், காயம் காரணமாக 2 போட்டிகளில் விளையாடமாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கொல்கத்தா அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் அஸ்வின் அபாரமாக பந்து வீசி 2 முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இந்தப் போட்டியில் அஸ்வின் களத்தடுப்பு செய்து கொண்டிருந்த போது கொல்கத்தா வீரர் சூர்யகுமார் யாதவ் அடித்த பந்தை அவர் பிடிக்க முயன்றார். அப்போது பந்து வலது கைவிரலில் தாக்கி காயம் ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து அவர் மைதானத்தில் இருந்து வெளியேறினார். அவருக்கு ஸ்கேன் செய்து பார்க்கப்படுகிறது.
இதையடுத்து அவருக்கு ஓய்வு அளிக்க அணி நிர்வாகம் முடிவு செய்து இருப்பதால் அடுத்த 2 ஆட்டங்களில் அவர் விளையாடமாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியிலும், ஐதராபாத்துக்கு எதிரான போட்டியிலும் அஸ்வின் ஆடமாட்டார் எனத் தெரிகிறது.
No comments
Post a Comment