நெல்லியடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, துன்னாலைப்பகுதியில் வெள்ளிக்கிழமை (10) இரு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட குழு மோதலில் நால்வர் படுகாயமடைந்த நிலையில், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நெல்லியடி பொலிஸார் சனிக்கிழமை (11) தெரிவித்தனர்.
துன்னாலை கலகை கந்தன் ஆலயத்தின் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட, துன்னாலை தக்குச்சம்பாட்டி மற்றும் கலிகை பகுதியைச் சேர்ந்த இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தகராறு கைகலப்பாக மாறியது.
இதனையடுத்து இரு தரப்பினரும் ஒருவருக்கொருவர் மோதிக்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை நெல்லியடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
No comments
Post a Comment