Latest News

April 23, 2015

Facebook மூலம் பேசும் வசதி
by admin - 1

பேஸ்புக் மூலம் நண்பர்களுடன் செல்போனில் பேசும் வசதி அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

யாரையாவது சந்தித்தால் தொலைபேசி இலக்கம் , முகவரி கேட்பதற்கு முன்பு பேஸ்புக்கில் இருக்கின்றீர்களா, என்று கேட்கும் அளவுக்கு நிலைமை மாற்றங்கண்டுள்ளது.

பேஸ்புக் மூலம் தான் பலர் நண்பர்களோடு தொடர்பில் உள்ளனர்.

இந்நிலையில், பேஸ்புக் ஹலோ என்ற அப்ளிகேஷனை அறிமுகப்படுத்தவுள்ளது.

இந்த அப்ளிகேஷன் மூலம் ஃபேஸ்புக் நண்பர்களை அவர்களின் செல்போனில் தொடர்பு கொள்ளலாம்.

உங்கள் செல்போனில் குறிப்பிட்ட பேஸ்புக் நண்பரின் செல்போன் எண் இல்லாவிட்டாலும் கவலை இல்லை. அந்நபர் பேஸ்புக்கில் செல்போன் எண்ணைக் குறிப்பிட்டிருந்தால் ஹலோ அப்ளிகேஷன் அங்கிருந்து எண்ணை எடுத்துக்கொள்ளும். பேஸ்புக் மெசஞ்சர் குழு உருவாக்கியுள்ள இந்த ஹலோ அப்ளிகேஷன் தற்போது சோதனை செய்யப்பட்டு வருகிறது. உங்களுக்கு பிடிக்காத நபர் பேஸ்புக் மூலம் அழைத்தால் அவரை நீங்கள் ப்ளொக் (block) செய்யும் வசதியும் உள்ளது. இது தவிர பேஸ்புக் மூலம் பணம் அனுப்பும் வசதியையும் அறிமுகப்படுத்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

« PREV
NEXT »

1 comment

கஞ்சனா said...

நல்லது இருக்கிறதே போதாது