கொழும்பிலுள்ள சில பிரதான வீதிகளில் நாளை முதல் வீதி விதிமுறை தொடர்பில் பரிட்சார்த்த நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளது.
நாளை (06) முதல் எதிர்வரும் 10 ஆம் திகதி வரை பரிட்சார்த்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவிக்கின்றார்.
அதற்கமைய மொரட்டுவை தொடக்கம் காலி வீதி ஊடாக காலிமுகத்திடல் வரையும், டுப்ளிகேசன் வீதியில் கொள்ளுபிட்டி தொடக்கம் பப்பலப்பிட்டி வரையும் பரிட்சார்த்த நடவடிக்கை முன்னெடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், பொரளை சேனாநாயக்க சந்தியிலிருந்து ஸ்ரீ ஜயவர்தனபுர வீதியில் பொல்துவ வரையிலும் வீதி விதிமுறைகள் தொடர்பான பரிட்சார்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் குறிப்பிட்டார்.
இதன் அடிப்படையில் சாரதிகள் விதிமுறைக்கு அமைய வாகனங்களை செலுத்துவது கட்டாயம் எனவும் கவனக்குறைவுடன் வாகனங்களை செலுத்துவது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Social Buttons