Latest News

April 12, 2015

குடா­நாட்டில் சின்ன வெங்­காயம், பச்சை மிளகாய் உட்­பட சகல காய்­கறி வகை­களின் விலையில் பாரிய வீழ்ச்சி ஏற்­பட்­டுள்­ளது.
by admin - 0

குடா­நாட்டில் சின்ன வெங்­காயம், பச்சை மிளகாய் உட்­பட சகல காய்­கறி வகை­களின் விலையில் பாரிய வீழ்ச்சி ஏற்­பட்­டுள்­ளது.
வெங்­காயம், பச்சை மிளகாய்

இதனால் உற்­பத்­தி­யா­ளர்­க­ளுக்கு திண்­டாட்டம் பாவ­னை­யா­ளர்­க­ளுக்கு கொண்­டாட்டம்.
குடா­நாட்டில் பருவ மழையும் கால­போக நெற்­செய்­கையும் முடி­வ­டைந்­ததையடுத்து வயல் நிலங்­க­ளிலும் மேட்டு நிலங்­க­ளிலும் மரக்­கறி வகைகள் உற்­பத்தி செய்­வதில் விவ­சா­யிகள் ஈடு­பட்­டுள்­ளனர்.

இதை­ய­டுத்து 200 ரூபா­வி­லி­ருந்து 300 ரூபா வரை விற்­பனை செய்­யப்­பட்டு வந்த கத்­தரி, பயிற்றை, வெண்டி, தக்­காளி, கோவா போன்ற மரக்­கறி வகைகள் தற்­போது 30 ரூபா­வி­லி­ருந்து 50 ரூபா வரை விற்­ப­னை­யா­கி­ன்றன.

இதே­வேளை, சின்ன வெங்­காயம் அறு­வ­டையும் ஆரம்­பிக்­கப்­பட்­ட­தை­ய­டுத்து ஒரு கிலோ 50 ரூபா­வி­லி­ருந்து 80 ரூபா வரை விற்­ப­னை­யா­கி­றது. பச்சை மிள­காயும் 15 ரூபா­வி­லி­ருந்து 20 ரூபா வரை விற்­ப­னை­யா­கி­றது. மரக்­கறி வகை­களின் விலை­களில் பாரிய வீழ்ச்சி ஏற்­பட்­டுள்­ளதால் விவ­சா­யிகள் உற்­பத்தி செலவும் கிடைக்காமல் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதேவேளை வியாபாரிகள் கூடுதலான நன்மை அடைந்து வருகிறார்கள்
« PREV
NEXT »