மட்டக்களப்பு மாவட்டத்தின் கோரளைப்பற்று வடக்கு பிரதேசத்தில் மேச்சல் தரை ஒதுக்கீடு மற்றும் விலங்கு வேளாண்மை தொடர்பான கலந்துரையாடல் நேற்று பகல் (27) பிரதேச செயலாளர் எஸ். ஆர்.ராகுலநாயகி தலைமையில் பிரதேச செயலகத்தின் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இக் கலந்துரையாடலில் மேய்ச்சல் தரை ஒதுக்கீடு, கால்நடை பண்ணையாளர் சங்க பதிவுகள், யானை வேலி, குளங்கள் புனரமைப்பு போன்ற விடயங்கள் கலந்தாலோசிக்கப்பட்டது.
இக் கலந்துரையாடலில், கிழக்க மாகாண சபையின் விவசாயம், கால்நடை உற்பத்தி அபிவிருத்தி, மீன்பிடி, நீர்ப்பாசன ,கூட்டுறவு அபிவிருத்தி மற்றும் உணவு வழங்கலும் விநியோகத்திற்கான அமைச்சர் கௌரவ கி.துரைராசசிங்கம் (சட்டத்தரணி), கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கௌரவ இரா. துரைரெட்ணம்- உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஆர். கங்காதரன், கமநல சேவைகள் திணைக்கள உத்தியோகத்தர்கள், கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்கள உத்தியோகத்தர்கள்,வனபரிபாலன திணைக்கள உத்தியோகத்தர்கள்,சுற்றாடல் அதிகாரசபையின் உத்தியோகத்தர்கள், கரையோரம் பேணல் திணைக்கள உத்தியோகத்தர்கள் ,பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பொலிஸ் உத்தியோகத்தர்கள், கால் நடை பண்ணையாளர்கள், விவசாயிகள், விவசாய அமைப்பின் பிரதிநிதிகள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
No comments
Post a Comment