யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடமாகாணத்தில் மீண்டும் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழான கைதுகள் அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த சில தினங்களுக்கு மூன்னரும் யாழ்ப்பாணம் அச்சுவேலி பகுதியில் வைத்து மூன்று பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.
சந்தேகத்துக்கு இடமான முறையில்நடமாடியதாகவும், அவர்களின் அடையாளத்தை உறுதிப்படுத்த தவறியதாகவும் தெரிவித்து இந்த கைது இடம்பெற்றுள்ளது.
புலனாய்வு பிரிவினரும், பயங்கரவாத தடுப்பு பிரிவினரும் இணைந்து இந்த கைதுகளை மேற்கொள்கின்றனர்.
வடமாகாண மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்துவதற்காகஇந்த நடவடிக்கை இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது.
No comments
Post a Comment