அதனை தொடர்ந்து இந்தியா - கனடா இடையே அணுசக்தி ஒப்பந்தம் குறித்து கையெழுத்தானது. அதன் பின் இரு நாட்டு தலைவர்களும் கூட்டாக பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தனர். அப்போது பிரதமர் மோடி கூறியதாவது: பயங்கரவாதத்துக்கு எதிராகப் போராட, மனிதநேயத்தில் நம்பிக்கையுள்ள அனைவரும் ஒன்றிணைய வேண்டும். பயங்கரவாதத்துக்கு எதிராக ஒருங்கிணைந்து போராட, ஐ.நா. தீர்மானம் தேவைப்படுகிறது. உலகம் முழுவதும் பயங்கரவாத அச்சுறுத்தல் அதிகரித்து வருகிறது. பயங்கரவாதத்துக்கு இனமோ, நிறமோ கிடையாது.
பயங்கரவாதத்தை முறியடிக்க எங்களின் ஒத்துழைப்பை அதிகரிக்க உள்ளோம். கடந்த ஆண்டு கனடா நாடாளுமன்றத்தின் மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் கண்டனத்துக்குரியது. நாடாளுமன்றம் என்பது ஜனநாயகத்தின் கோயிலாகும். இதன் மீது நடத்தப்படும் தாக்குதல், ஒரு கட்டடத்தின் மீது நடத்தப்படும் தாக்குதல் அல்ல.
அது ஜனநாயகத்தின் மீது நடத்தப்படும் தாக்குதலாகும்' என்றார். மேலும், கனடா நாட்டவர்களுக்காக, தாராளமான விசா கொள்கையை பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். "இந்த புதிய விசாக் கொள்கை மூலம் இருநாட்டு மக்கள் இடையிலான தொடர்புகள் மேம்படும்' என அவர் தெரிவித்தார்.
மோடியைத் தொடர்ந்து பேசிய கனடா நாட்டின் பிரதமர் ஸ்டீபன் ஹார்பர், ‘அடுத்த 5 ஆண்டுகளுக்கு இந்தியாவிற்கு கனடா யுரேனியம் சப்ளை செய்யும்' என்றார். அதேபோல், ‘கனடா சென்ற பின் விசா வாங்கும் வசதியை இந்தியர்களுக்கு அளிப்பதாக' அவர் அறிவித்தார். இந்தியர்களுக்கு இந்த வசதியை அளிக்கும் 51வது நாடு கனடா என்பது குறிப்பிடத்தக்கது.
No comments
Post a Comment