Latest News

April 11, 2015

சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பில் அமெரிக்கா - கியூபா அதிபர்கள்
by admin - 0

அமெரிக்காவும் கியூபாவும் அரை நூற்றாண்டுக்கும் அதிகமான காலம் ஒருவர் மற்றவரிடம் பகைமையும் அவநம்பிக்கையும் பாராட்டியும் வந்த நிலையில், இவ்விரு நாடுகளின் அதிபர்களும் இன்று சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளனர்.



கியூபப் புரட்சிக்குப் பின்னர் இவ்விருநாடுகளின் அதிபர்களும் நேரடிப் பேச்சுவார்த்தை நடத்துவதென்பது இதுவே முதல் முறை.

இந்த சந்திப்பின்போது கியூபாவில் அரசியல் சீர்திருத்தம் கொண்டுவரப்படுவது பற்றி அமெரிக்க அதிபர் ஒபாமா பேசவிரும்புவார்.

கியூபா மீது அமெரிக்கா விதித்துள்ள வர்த்தகத் தடைகள் முடிவுக்குக் கொண்டுவரப்படுவது பற்றியும், பயங்கரவாதத்துக்கு ஆதரவளிக்கும் நாடுகளாக அமெரிக்கா வைத்துள்ள பட்டியலில் இருந்து கியூபா நீக்கப்படுவது பற்றியும் கியூப அதிபர் ரவூல் காஸ்ட்ரோ பேச விரும்புவார்.

பனாமாலில் நடந்த அமெரிக்க கண்ட நாடுகளின் மாநாட்டில் இரு தலைவர்களும் சந்தித்து கைகுலுக்கி அளவளாவியிருந்தனர்.

லத்தீன அமெரிக்காவில் அமெரிக்கா கேள்விக் கணக்கின்றி தலையிட்ட காலமெல்லாம் முடிந்துவிட்டது என்றும் முன்னதாக அதிபர் ஒபாமா கூறியுள்ளார்.

« PREV
NEXT »

No comments