உள்நாட்டுப் போர் தீவிரமடைந்துள்ள ஏமனில் அரசு மற்றும் கிளர்ச்சியாளர் படைகளுக்கு எதிராக தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ள அல் கொய்தா தீவிரவாதிகள், முக்கிய விமான நிலையத்தை கைப்பற்றியுள்ளனர்.
ஏமனில் அரசுக்கு ஆதரவான கூட்டுப்படையினருக்கும், கிளர்ச்சியாளர் படையினருக்கும் இடையே போர் நடைபெறுகிறது. இந்த குழப்பத்தை பயன்படுத்தி இரு படைகளையும் குறிவைத்து தாக்குதல் நடத்தும் அல் கொய்தா தீவிரவாதிகள், சிறைகளில் உள்ள தங்கள் தலைவர்களை மீட்டதோடு, பல முக்கிய பகுதிகளையும் கைப்பற்றி வருகின்றனர்.
சமீபத்தில் அல்முகலா நகரின் பல பகுதிகளை கைப்பற்றிய அவர்கள், அங்குள்ள தெற்கு ஏமனின் விமானப் போக்குவரத்து மையமாக திகழும் ரியான் விமானநிலையத்தையும் தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளனர். இதனிடையே ஏமனின் துணை அதிபராக பொறுப்பேற்ற காலத் பாஹா, ஏமனில் அமைதியை நிலைநாட்ட கிளர்ச்சியாளர்களுடன் பேச்சுவார்த்தைக்கு தயாராக உள்ளதாக கூறியுள்ளார்.
இந்நிலையில் ஏமனில் உடனடியாக போர்நிறுத்தம் செய்யப்பட வேண்டியது அவசியம் என ஐ.நா பொதுச் செயலாளர் பான் கீ மூன் கூறியுள்ளார்.ஏமனில் அர-சுக்கு எதிரான தாக்குதலை கிளர்ச்சியாளர்கள் தீவிரப்படுத்தியதை அடுத்து, அந்நாட்டு அதிபர் ஹாதி சவுதி அரேபியாவில் தஞ்சம் புகுந்தார். இதனை தொடர்ந்து ஏமன் அரசுக்கு ஆதரவாக சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப் படையினர் கிளர்ச்சியாளர்கள் மீது வான்வழி தாக்குதல் நடத்துகின்றனர்.
No comments
Post a Comment