நிலத்தடி நீர் மாசடைவு தொடர்பில் கடந்த 12 ஆம் திகதி யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின்போது ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியிருந்தன.
இது தவறான ஓர் அணுகுமுறையென ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
இந்தவிடயம் தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள அவர், சுமார் 13 ஆயிரத்த 414 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 45,764 பேரை பாதிப்பிற்கு உட்படுத்தியுள்ள முக்கிய விடயம் தொடர்பில் அந்த மக்களுக்கு தெளிவினை ஏற்படுத்தக்கூடிய பாரிய சமூகப் பொறுப்பு ஊடகவியலாளர்களுக்கு உள்ளதாக தெரிவித்தார்.
ஒரு கலந்துரையாடலின் பின்னர், அதில் எடுக்கப்பட்ட முடிவுகளைக் கேட்டறிந்து கொள்வதைவிட, அந்த கலந்துரையாடலில் முன்வைக்கப்படுகின்ற பல்வேறு கருத்துக்களையும், வாதப்பிரதிவாதங்களையும் நேரில் கேட்டறிய வேண்டும்.
அவற்றினை உள்ளடக்கியதாக தங்கள் நோக்குகளில் செய்திகளை எழுதி வெளிவரச் செய்வதே அந்தச் செய்தியின் நம்பகத் தன்மையை மேலும் வலுப்பெறச் செய்வதாக அமையும் என டக்ளஸ் தேவானந்தா குறிப்பிட்டுள்ளார்.
கடந்த காலங்களில் யாழ்ப்பாண மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் இடம்பெற்ற ஒருங்கிணைப்புக் குழு மற்றும் அபிவிருத்திக் குழுக்களின் கூட்டங்களிலும் ஊடகவியலாளர்களை கலந்துகொள்ள விடக்கூடாது என ஒருசாரார் தெரிவித்து வந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
எனினும், தான் அதனை மறுத்து, ஊடகவியலாளர்களையும் கலந்துகொள்ளச் செய்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதேவேளை, கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சின் மூலம் கடற்றொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டுவரும் மானிய அடிப்படையிலான வலைகள் வடபகுதி கடற்றொழிலாளர்களின் தொழிற் செயற்பாடுகளுக்கு பொருத்தமோ, தரமோ அற்றதாக இருப்பதாக குற்றம்சுமத்தப்பட்டுள்ளது.
இதனால், பொருத்தமான வலைகளை வழங்க கடற்றொழில் அமைச்சு நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள செயலாளர் நாயகம், கடந்த அரசாங்கம் கடற்றொழிலாளர்களுக்கு வழங்கிவந்த எரிபொருள் மானியத்தை நிறுத்தி, அதற்கு பதிலாக ஜி.பி.எஸ் உபகரணங்கள், குளிர்சாதன பெட்டிகள், படகு இயந்திரங்கள் மற்றும் வலைகளை வழங்கியதாக குறிப்பிட்டார்.
இவ்வாறு வழங்கப்படுகின்ற வலைகள் தங்களது தொழிலுக்கு பொருத்தமற்றவை என்றும், தரமற்றவை என்றும் வட பகுதி கடற்றொழிலாளர்கள் முறையிட்டுள்ளனர்.
கடந்த மாதம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்திருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்ஹவிடம் இதுபற்றி எடுத்துக் கூறப்பட்டது.
பின்னர் எழுத்து மூல கோரிக்கையையும் அரசாங்கத்திடம் சம்ர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்
.
EPDP கடத்திய ஊடகவியாளர் குடும்பத்தின் நிலைமை
.
EPDP கடத்திய ஊடகவியாளர் குடும்பத்தின் நிலைமை
No comments
Post a Comment