Latest News

April 27, 2015

பசுமாடுகள் மூலம் 750 கோடி கொள்ளையடித்த பசில் மற்றும் ஆறுமுகன்!
by admin - 0

பசுமாடுகள் மூலம் 750 கோடி கொள்ளையடித்த பசில் மற்றும் ஆறுமுகன்!
கடந்த அரசாங்கத்தில் இருந்த டீல் காரர்களில் பாரிய ரீல்காரர்கள் பற்றி தகவல் எமக்கு கிடைக்கப்பெற்றுள்ளது. இந்த கள்ள வேலையுடன் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரும் மிகப்பெரிய டீல் காரருமான பசில் ராஜபக்ஷ மற்றும் மலையக மக்களின் சந்தாப்பணத்தை பெற்று தொழிற்சங்கம் என்ற போர்வையில் அவர்களை விற்றுப் பிழைப்பு நடத்தும் முன்னாள் கால்நடைவள கிராமிய அபிவிருத்தி அமைச்சர் ராமநாதன் ஆறுமுகன் (தொண்டமான்) ஆகியோர் தொடர்புபட்டுள்ளனர். 
இந்தக் கள்ள வேலைக்கு இவர்கள் பசுமாடுகளைப் பயன்படுத்தியுள்ளனர்.
கால்நடைவள அமைச்சும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சும் இணைந்து திட்டம் செயற்படுத்தி அவுஸ்திரேலியாவில் இருந்து 10,000 பசு மாடுகளை இறக்குமதி செய்துள்ளனர். ஒரு பசுமாட்டின் பெறுமதி 2400 அவுஸ்திரேலிய டொலர் ஆகும்.

 அது இலங்கை பணத்தில் 249,600 ரூபாவாகும். ஆனால் இந்த திருடர்கள் இருவரும் ஒரு பசுமாட்டினை 10 மில்லியனுக்கு கொள்வனவு செய்துள்ளனர்.
பசில் ராஜபக்ஷவும் ஆறுமுகனும் இணைந்து ஒரு பசுமாட்டில் சுமார் ஏழரை லட்சம் ரூபா பணத்தை கொள்ளையடித்துள்ளனர். 

ஒரு பசு மாட்டின் பெறுமதியில் மூன்று மடங்கு பணத்தை இவ்விருவரும் சுருட்டியுள்ளனர். அதன்படி 10,000 பசுமாடுகள் இறக்குமதி செய்து ஒரு பசு மாட்டிற்கு ஏழரை லட்சம் என்ற கணக்கில் 750 கோடியை கொள்ளையடித்துள்ளனர்.

மேலும் பசில் ராஜபக்ஷ எவ்வித அனுமதியும் இன்றி ஆயிரம் பசு மாடுகளை இந்தியாவிற்கு கொண்டு சென்றதுடன் அதிலும் மில்லியன் கணக்கில் பணம் மோசடி செய்துள்ளார்.

இது குறித்து தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் பழனி திகாம்பரமும் மேல் மாகாண சபை உறுப்பினர் மனோ கணேசனும் லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்ய எதிர்பார்த்துள்ளனர்.
 இன்றைய தினம் லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிற்குச் செல்லவிருந்த அவர்கள் பாராளுமன்ற விவாதம் காரணமாக வேறு ஒரு தினத்தில் செல்லவுள்ளதாகவும் அதன்போது பசில் மற்றும் ஆறுமுகனுக்கு எதிராக முறைப்பாடு செய்யவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
« PREV
NEXT »

No comments