* சுற்றிவளைத்து சரமாரி தாக்குதல்
* அப்பாவி தொழிலாளர்கள் உயிர்பறிப்பு
திருப்பதி அருகே வனப்பகுதியில் நேற்று அதிகாலை செம்மரக்கட்டை கடத்த முயன்றதாகக் கூறப்படும் கும்பல் மீது சிறப்பு அதிரடிப்படை போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் வேலூர், திருவண்ணாமலையைச் சேர்ந்த 20 தமிழ் தொழிலாளர்கள் பரிதாபமாக பலியாயினர். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திட்டமிட்டு கொடூரமாக 20 தொழிலாளர்களை சுட்டுக் கொன்ற சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று தமிழக அரசியல் கட்சிகள் வலியுறுத்தி உள்ளன.
ஆந்திர மாநிலம் சித்தூர், கடப்பா, கர்னூல் ஆகிய 3 மாவட்டங்களை உள்ளடக்கியது சேஷாசலம் வனப்பகுதி. இங்கு செம்மரங்கள் அதிகளவில் வளர்ந்துள்ளன. இந்த செம்மரங்களை கடந்த 10 ஆண்டுகளாக மர்ம கும்பல்கள் வெட்டி வாகனங்கள் மூலமாக தமிழகம், கர்நாடகா உள்பட பல்வேறு மாநிலங்கள் மட்டுமின்றி சிங்கப்பூர், மலேசியா போன்ற வெளிநாடுகளுக்கும் கடத்தி செல்கின்றன.
அப்பாவி தொழிலாளர்கள்: செம்மரங்களை வெட்டுவதற்காக கடத்தல் கும்பல், ஆந்திர மாநிலத்தையொட்டி உள்ள தமிழ்நாட்டில் திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி போன்ற மாவட்டங்களை சேர்ந்த கூலி தொழிலாளர்களை நிறைய பணம் தருவதாக ஆசை வார்த்தைக் கூறி அழைத்து செல்கின்றனர். பெரும்பாலும் படிப்பு அறிவு இல்லாத மலைப்பகுதியைச் சேர்ந்த அப்பாவிகளையே இந்த கும்பல் குறிவைத்து அழைத்து செல்கின்றது. கடந்த 15.12.2013 அன்று திருப்பதி ஏழுமலையான் கோயில் அருகே செம்மரங்களை வெட்டிய கும்பலை தடுக்க சென்ற வனவர் ஸ்ரீதர், வன ஊழியர் டேவிட் கருணாகரன் ஆகியோரை கடத்தல் கும்பல் தாக்கியது. இதில் அவர்கள் இருவரும் இறந்தனர். இதையடுத்து கடத்தல் கும்பல் மீது கடும் நடவடிக்கை எடுக்கும்படி ஆந்திர மாநில அரசு உத்தரவிட்டது.
சிறப்பு அதிரடிப் படை: இதையடுத்து வனத்துறையினருடன் போலீசார் இணைந்து சிறப்பு அதிரடிப்படை உருவாக்கப்பட்டது. இக்குழுவில் வனத்துறையினருடன், துப்பாக்கி ஏந்திய போலீசார் செம்மரக்கட்டை கடத்தல் கும்பலை கண்காணித்து வருகின்றனர். இருப்பினும், திருப்பதியையொட்டி உள்ள வனப் பகுதிகளில் தமிழகத்தை சேர்ந்த படிப்பறிவு இல்லாத வறுமையில் வாடும் அப்பாவி கூலித்தொழிலாளர்களை, புரோக்கர்கள் அழைத்து சென்று கடத்தலில் ஈடுபடுத்தி வருகின்றனர். திருப்பதி வனத்தில்: நேற்று அதிகாலை திருப்பதி அடுத்த ஸ்ரீவாரி மெட்டு அருகே சுமார் 6 கி.மீ. தூரத்தில் உள்ள ஈஸ்தகாயலபண்டா என்ற அடர்ந்த வனப்பகுதியில் 200 பேர் கொண்ட கும்பல் பதுங்கி இருப்பதாகவும், அவர்கள் செம்மரங்களை வெட்டுபவர்கள் என்பதும் செம்மரக் கடத்தல் தடுப்பு பிரிவு டிஐஜி காந்தாராவுக்கு தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில் வனத்துறையினர் மற்றும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் அடங்கிய அதிரடிப்படையினர் வனப்பகுதிக்கு அதிகாலை 5.30 மணியளவில் விரைந்து சென்றனர்.
இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த கடத்தல் கும்பல் அதிரடி படையினர் மீது கற்களை சரமாரியாக வீசி தாக்கினர். இந்த தாக்குதலில் போலீசார் சிலர் காயமடைந்தனர். இதையடுத்து போலீசார் ஒலிபெருக்கி மூலம் கடத்தல் கும்பலை சரணடையுமாறு எச்சரிக்கை விடுத்தனர். ஆனால், மர்ம கும்பல் தொடர்ந்து கற்களை வீசியபடி தப்பிச் செல்ல முயன்றதால் போலீசார் அவர்களை நாலாபுறமும் சுற்றி வளைத்தனர். அப்போதும் அவர்கள் சரமாரியாக கற்களை வீசினர். இதனால் போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு மீண்டும் எச்சரிக்கை செய்தனர். ஆனாலும் அந்த கும்பல் சரணடையவில்லை. துப்பாக்கிச்சூடு: அதிரடிப்படையினர் அந்த கும்பல் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். சுமார் அரை மணி நேரமாக தொடர்ந்து இரு தரப்புக்கும் இடையே கடும் மோதல் நடந்தது. இதையடுத்து கடத்தல் கும்பல் வனப்பகுதிக்குள் தப்பி ஓடிவிட்டது. ஸ்ரீவாரி மெட்டு வனப்பகுதியிலிருந்து சுமார் 6 கி.மீ. தொலைவில் உள்ள ஈஸ்தகாயலபண்டா என்ற இடத்தில் 9 பேரும், அங்கிருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ள சச்சினவாடுபண்டா பகுதியில் 11 பேரும் சடலமாக கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
பலியானவர்கள் யார்?: வனப்பகுதியில் அதிகாலையில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்கள் குறித்து போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் வேலூரை சேர்ந்த 4 பேரும், திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலை நம்மியம்பட்டு கிராமத்தை சேர்ந்த 8 பேரும், விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரத்தைச் சேர்ந்தவர்கள் 8 பேரும் துப்பாக்கிச் சூட்டில் பலியானதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால், இறந்தவர்கள் யார் என்ற விவரங்களை போலீசார் தெரிவிக்கவில்லை. டிஜஜி விசாரணை: துப்பாக்கிச்சூடு சம்பவம் பற்றி தகவல் கிடைத்ததும், அதிரடிப்படை பிரிவு டிஐஜி காந்தாராவ், அனந்தப்பூர் டிஐஜி பாலகிருஷ்ணா, திருப்பதி எஸ்பி கோபிநாத்ஜெட்டி, சித்தூர் எஸ்பி சீனிவாஸ் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். கல்வீச்சில் காயம் அடைந்த 11 அதிரடிப்படை வீரர்கள் திருப்பதி மலையடிவாரத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். துப்பாக்கிச் சூட்டில் அப்பாவி தொழிலாளர்கள் 20 பேர் பலியான சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. உண்மையை வெளிக்கொணர சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று தமிழக அரசியல் கட்சிகள் வலியுறுத்தி உள்ளன.
இதுவரையில் 29 தமிழர் பலி
2013 டிசம்பர் மாதம் முதல் இதுவரையிலும் செம்மர கடத்தல்காரர்களால் 2 வனத்துறை அதிகாரிகள் கொல்லப்பட்டனர். அதைத் தொடர்ந்து போலீசார் வனப்பகுதியில் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் தனித்தனி சம்பவங்களில் 9 பேரும் நேற்று ஒரே நாளில் 20 பேரும் என இதுவரை மொத்தம் 29 அப்பாவி தமிழர்கள் உயிரிழந்துள்ளனர்.
மனித உரிமை கமிஷன் நோட்டீஸ்
20 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டது குறித்து பத்திரிகைகளில் செய்தி வெளியானது. இந்த சம்பவத்தை மனித உரிமை மீறல் என்று கருதி தேசிய மனித உரிமை கமிஷன் விசாரணைக்கு நேற்று எடுத்தது. இதை விசாரித்த கமிஷனின் தலைவர் நீதிபதி முருகேசன், இது தொடர்பாக விளக்கம் அளிக்க ஆந்திர மாநில தலைலை செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். ஆந்திரா போலீஸ் டிஜிபியும் பதில் அளிக்க வேண்டும். வரும் 23ம் தேதி ஆந்திரா மாநிலம் ஐதராபாத்தில் கமிஷன் விசாரணையை நடத்தும். அப்போது ஆந்திரா மாநில தலைமை செயலாளர், டிஜிபி ஆகியோர் பதில் அளிக்க வேண்டும் என்று கமிஷன் நீதிபதி டி.முருகேசன் உத்தரவிட்டார். - See more at: http://m.dinakaran.com/Detail.asp?Nid=139858#sthash.T7M1DEdO.dpuf

No comments
Post a Comment