ஜனநாயகம் என்ற பெயரில் இலங்கையை சீர்குலைக்கும் இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன் என்பவற்றின் சதித்திட்டமே நாட்டுக்குள் அரங்கேற்றப்பட்டு வருகிறது எனக் குற்றம் சாட்டும் பொது பலசேனா,நூறு நாட்களுக்கு பின்னர் இந்த ஆட்சியின் ஆட்டம் அடங்கிவிடும் என்றும் தெரிவித்தது.
இது தொடர்பாக பொதுபல சேனாவின் நிர்வாகப் பணிப்பாளர் கலாநிதி டிலந்த விதானகே மேலும் தெரிவிக்கையில், இன்று இல்லை நாளை என்பதைப் போன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அரசாங்கத்திற்கு தோஷம் பிடித்து ஆட்டுகின்றது.
நாட்டு மக்களிடம் இன்று அரசு தொடர்பான நம்பிக்கை இல்லாது போயுள்ளதோடு மக்கள் விரக்தியின் விளிம்பில் நிற்கின்றனர்.
ஜனநாயகம் என்ற பெயரில் நாட்டை சீர்குலைத்து புலம்பெயர் புலிகளின் தேவைகளை நிறைவேற்றும் இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளின் சதித்திட்டமே நாட்டுக்குள் முன்னெடுக்கப்படுகின்றது.
நூறு நாட்களுக்குள் இந்த அரசாங்கம் ஆடும் ஆட்டம் நின்றுவிடும். ஆனால் அரசின் ஆட்டத்தை நிறுத்த தேசப்பற்றுள்ள குழுவினர் சாடும் பிரயத்தனத்தை முன்னெடுக்க வேண்டும். ஏனென்றால் இன்று வெளிநாட்டு சதிகாரர்களின் கைகள் ஓங்கியிருக்கின்றன. அதனை ஒழிப்பது மிகக் கடினமாகும்.
கடினமான இக்காரியத்தை மேற்கொள்ள கட்சி பேதமில்லாமல் ஒன்று பட வேண்டும் என்றும் கலாநிதி டிலந்த விதானகே தெரிவித்தார்.
No comments
Post a Comment