Latest News

March 20, 2015

வசாவிளான் கையளிப்பு மைத்திரி அரசின் கண்துடைப்பு அம்பலமாகியது
by admin - 0

WWW,VIVASAAYI.COM
வலி.வடக்கு உயர் பாதுகாப்பு வலயப்பகுதிக்குள் இருந்த வசாவிளான் கிழக்கு கிராமசேவையாளர் பிரிவு மக்கள் பாவனைக்காக இன்று கையளிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அது கண்துடைப்பென்பது அம்பலமாகியுள்ளது.
இன்று விடுவிக்கப்பட்டதாக காண்பிக்கப்பட்ட பகுதியில் பெரும்பகுதி முன்னரும் எப்போதும் மக்கள் இருந்திராத தரவையே என உண்மையை அழைத்து செல்லப்பட்ட மக்கள் போட்டுடைத்துள்ளனர்.
வலி.வடக்கு வலி.கிழக்குப் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் ஆயிரத்து நூறு ஏக்கர் காணி விடுவிப்பதற்கு அமைச்சர வையில் தீர்மானம் எட்டப்பட்டிருந்தது. அதற்கமைய 6 கிராம சேவையாளர் பிரிவுகள் முதல் கட்டமாக விடுவிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அவை ஒவ்வொன்றும் கண்ணிவெடி அகற்றப்பட்டதன் பின்னர் மக்களிடம் கையளிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
கடந்த வெள்ளிக்கிழமை, வலி.கிழக்குப் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட வளலாய் கிராம சேவையாளர் பிரிவு மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டது. குறித்த பிரதேசத்தில் தற்போது மக்கள் தங்க முடியாது. இருப்பினும் பார்வையிடவும், துப்புரவு செய்வதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இன்று , வலி.வடக்குப் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட வசாவிளான் கிழக்கு (ஜே-244) பிரதேசம் மக்கள் பாவனைக்காக கையளிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்தப் பிரதேசத்தில் மீளக்குடியமர்வதற்கு 411 குடும்பங்கள் வரையில் பிரதேச செயலகத்தில் பதிவு செய்திருந்தன. தற்போது மீள்பதிவின் போது 221 குடும்பங்கள் தங்கள் பதிவுகளை உறுதிப்படுத்தியுள்ளன.
வசாவிளான் கிழக்கைச் சேர்ந்த மக்கள், இன்று காலை 10 மணிக்கு குட்டியப்புலத்திலுள்ள, இராணுவ எல்லைப் பகுதிக்கு வருமாறு அழைக்கப்பட்டிருந்தனர்.
அவ்வாறு அழைக்கப்பட்டிருந்த மக்களே இருபுறமும் இராணுவ முட்கம்பி வேலி அமைக்கப்பட்டிருந்த பகுதியினூடாக உள்ளெ செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தனர். ஆனால் பார்வையிட அனுமதிக்கப்பட்ட பகுதி உறுதி மொழி வழங்கி மக்கள் குடியமர அனுமதிக்கப்போவதாக தெரிவிக்கப்பட்ட பகுதியில்லையென தெரிவித்து மக்கள் தமது அதிருப்தியினை வெளியிட்டிருந்தனர்.
இப்பகுதிகளை கையளிக்கும் நிகழ்விற்கு எதிர்வரும் திங்கட்கிழமை ஜனாதிபதி மைத்திரி மற்றும் பிரதமர் ரணில்விக்கிரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா ஆகியோர் வருகை தரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
« PREV
NEXT »