வேலணைச் சந்தியிலிலுள்ள 7 கடைகள் ஞாயிற்றுக்கிழமை (29) இரவு உடைக்கப்பட்டு பெறுமதியான பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர்.
பலசரக்கு, உணவகம், தொலைத்தொடர்பு, மரக்கறி ஆகிய விற்பனை செய்யும் கடைகளே இவ்வாறு உடைக்கப்பட்டு, அங்கிருந்த அத்தியாவசியமான பொருட்களும், தொலைத்தொடர்பு நிலையத்தில் இருந்து 3,000 ரூபாய் பணமும் திருடப்பட்டுள்ளது.
திருடப்பட்ட பொருட்களின் மொத்தப் பெறுமதி கணக்கிடப்படவில்லையெனவும், உரிமையாளர்கள் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸார் கூறினர்.
No comments
Post a Comment