Latest News

March 13, 2015

கடத்தப்பட்ட பெண் திரும்பினார்! கடத்தலில் இராணுவ சிவில்பாதுகாப்பு பிரிவினர்!!
by admin - 0

நேற்று காலை முன்பள்ளிக்கு செல்லும் போது புதுக்குடியிருப்பினில் வைத்து  மோட்டார் சைக்கிள்களில் வந்த இனந்தெரியாத நபர்கள் நால்வரினால் கடத்தப்பட்டுள்ள குடும்பப்பெண் வீடு திரும்பியுள்ளார்.

இலங்கையின் சிவில் பாதுகாப்பு பிரிவின் கீழுள்ள முன்பள்ளி ஆசிரியராக பணிபுரிந்த புதுக்குடியிருப்பை வதிவிடமாக கொண்ட விஸ்வலிங்கம் வினோதினி(வயது26) என்ற பெண்ணே கடத்தப்பட்டிருந்தார்.விடுதலை புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினராவார்.

தற்போது புதுக்குடியிருப்பு அரசினர் வைத்தியசாலையினில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.வினோதினி கடந்த அரசாங்கத்தின் புனர்வாழ்வளிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டு சிவில் பாதுகாப்பு பிரிவின் கீழ் இயங்கும் முன்பள்ளி ஆசிரியராக செயற்பட்டு வந்துள்ளார்.

இதனிடையே கடத்தலுடன் தொடர்புபட்டவர்களும் இலங்கை இராணுவத்தின் சிவில் பாதுகாப்பு குழுவை சேர்ந்தவர்களென கண்டறியப்பட்டுள்ளது.
« PREV
NEXT »

No comments