Latest News

March 31, 2015

யாருக்கும் சொல்லாதீங்கோ
by admin - 0

முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நிலைப்பாட்டை எடுத்திருக்கின்றது, போதாக்குறைக்கு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் விடுத்திருக்கிற அழைப்பு எல்லாம் சேர்ந்து சிங்கக்கொடி காத்த வீரன் சம்பந்தனுக்கு அடிவயிறை கலங்க வைச்சிருக்கிறதாம். முந்தி நேரம் இல்லையெண்டு சொல்லுற ஆள் இப்ப பங்காளி கட்சி தலைவர்களைக் கூப்பிட்டு அடிக்கடி பேசிறாராம். அதிலயும் விக்கியை அடுத்த தலைவராகச் சொல்லி நடக்கிற ஏற்பாடுகளை பற்றி நோண்டி நோண்டி கேட்டதாகக் குசுகுசிக்கினம்.
பாடசாலைப்பொடியளின்ர தண்ணீருக்குள்ள நஞ்சு கலந்து அரசியல் செய்தவையை மாற்றுக்கருத்தில்லாமல் கழுமரமேற்றவேணும் பாருங்கோ. 26 பிஞ்சுகள் கருகிப்போகமால் மயிரிழையில் உயிர்தப்பியிருக்குதுகள். உங்கடை கேவலம் கெட்ட அரசியல் பிழைப்புக்கு அந்த பிஞ்சுகளோ கருவியாகின்றது. கடவுள் சித்தமோ என்னவோ எல்லோரும் திரண்டு வந்து காப்பாத்திப்போட்டினம். குற்றவாளிகளைக் கைது செய்யிறதிலயும் ஒற்றுமையாக இருந்தவை. மனதார உரியவைக்கு பாராட்டுக்கள்.

கனடா போன கூத்தமைப்பின்ர பின்கதவு எம்பி ஊடகங்களை எதிர்கொள்ள பின்னடிச்சவராம். அதனால வடிகட்டித்தான் ஆட்களை சந்திச்சவராம். என்ன கேள்வி கேட்டுகிழிச்சுப்போடுவங்களெண்ட பயம் தானாம் காரணமாம். 

அதனால கேள்வி கேட்கத்தெரிஞ்ச ஆட்களை வடிகட்டிதான் சந்திப்பிற்கு கூட்டிப்போனதாம். அவற்றை அப்புக்காத்து மூளை இஞ்சை மாதிரி அங்கினை அவியாது பாருங்கோ.கொழும்பில இருக்கின்ற தமிழ் ஊடகவியலாளர்கள் ஒன்றியமெண்டது பின்கதவு எம்பியிட்ட கைநீட்டி காசு வாங்கி அன்னதானம் நடத்தினது பலருக்கு கடும் சீற்றத்தை கொடுத்திருக்கின்றது. உயிர் தியாகங்களாலும் இரத்தமும் கண்ணீராலும் கட்டியெழுப்பப்பட்டது தமிழ் ஊடகத்துறை. அற்ப சலுகைகளிற்காக அந்த ஊடகத்துறையை கூட்டிக்கொடுக்கின்றது மிகக்கேவலமானது. ஏற்கனவே பத்திரிகை ஆசிரியர் ஒருவர் கதிரையினை விட்டுப்போக வழிதேடிக்கொடுத்த அதே நபரிடம் காசு வேண்டினது வார்த்தையில சொல்லேலாத கேவலம் பாருங்கோ.

தாறதை வேண்டிக்கொண்டு பொத்திக்கொண்டிருங்கோ என்றது மைத்திரி அரசினது புதிய பாதை பாருங்கோ. வலி.வடக்கில நாடு கேட்டு கடைசியில வீடு கேட்ட பாண்டவர் கதை மாதிரி கடைசியில் 6 ஆயிரத்து 300 ஏக்கரில் மிஞ்சினது வெறும் 250 ஏக்கர்தான். அதனை சர்வதேச அரங்கில அம்பலப்படுத்த வேண்டிய கூட்டமைப்பின்ர தலைகள் காட்டிவருகின்ற மௌனம் இணக்க அரசியலோவெண்டு உங்களை மாதிரி எனக்கும் சந்தேகத்தை தரத்தான் செய்யுது பாருங்கோ.

வடமாகாணசபை உறுப்பினர்கள் வெளிநாடுகள் செல்லாமல் தடுக்கின்றதில நடந்த சதிகளின்ர பின்னணியில் பேரவை தலை பின்னாலிருக்கின்றது அம்பலமாகியிருக்கின்றது. புதிய ஆளுநர் தனக்கும் இதுக்கும் தொடர்பில்லையெண்டு சொல்லிப்போட்டாராம். தாங்கள் புலம்பெயர் உறவுகளைத் தேடிப்போனால் நிச்சயம் செருப்பாலை அடிப்பாங்கள் என்றது அவைக்கு தெரியும். அதனாலதான் தாங்கள் பதுங்கியிருந்து கொண்டு போறவாறவைக்கு ஆப்படிக்க பழைய ஆளுநரை பயன்படுத்தினது அம்பலமாகியிருக்கின்றது.
சுன்னாகம் கழிவு ஓயில் கலந்த தண்ணீர் விவகாரத்தில பலபேர் கையை நனைச்சது கெதியில அம்பலமாகப்போகுதாம். தங்கடை பிள்ளையள் வெளிநாட்டில மினரல் வோட்டர் குடிக்க ஊர் பிள்ளையள் கழிவு தண்ணீரை குடிச்சா என்ன கட்டையில போனால் என்ன என்ற வகையில தான் இவையள் செயற்பட்டுவாறதும் அம்பலமாகியிருக்குது.அதில சர்ச்சைக்குரிய மின் உற்பத்தி நிலையத்திட்ட கைநீட்டினதெண்டு ஆளாளுக்கு அவையளிற்குள்ளேயே மற்றைய ஆளை குற்றஞ்சாட்டுறதும் குசுகுசுக்கின்றதும் நடக்கத்தான் செய்யுது.


நன்றி 

பதிவு இணையம்


« PREV
NEXT »

No comments