Latest News

March 01, 2015

என் கணவர் செய்த தவறை கூற விரும்பவில்லை- கவிஞர் தாமரை 3வது நாளாக போராட்டம்
by Unknown - 0

கவிஞர் தாமரை தனது கணவர் தியாகுவின் அலுவலகம் முன்பு இன்று 3–வது நாளாக தர்ணா போராட்டத்தை தொடர்ந்து கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தியாகுவின் விளக்கம் தொடர்பாகவும், தொடரும் தனது போராட்டம் குறித்தும் தாமரை கூறுகையில், எனக்கும், தியாகுவுக்கும் முதல் திருமணம் தோல்வியிலேயே முடிந்தது.

இதனால் முறைப்படி விவாகரத்து பெற்ற பின்னர் இருவருமே மனமுவந்து திருமணம் செய்து கொண்டோம். தியாகு சொல்வது போல சட்டப்பூர்வமான தீர்வுக்கு நான் தயாராக இல்லை, எனக்கு தேவை சமூக தீர்வுதான்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 23ம் திகதி இரவு தஞ்சையில் நடக்கும் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக புறப்பட்டு சென்ற அவர், அதன் பின்னர் வீடு திரும்பவே இல்லை. பிரபலமான தமிழ் கவிஞரான நான் இப்படி போராட்டத்தில் ஈடுபடுவது ஏன்? என்பது பற்றி, தமிழ் உணர்வாளர்களே தியாகுவிடம் கேட்க வேண்டும்.

இதற்கு உரிய தீர்வு கிடைக்கும் வரை எனது போராட்டம் நீடிக்கும். தமிழ் உணர்வாளர்கள் பலரும், பெண் கவிஞர்கள் மற்றும் எழுத்தாளர்கள் பலரும் எனது போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். மேலும், நான் எந்த தவறும் செய்யவில்லை, தவறு செய்தது தியாகுதான் என்றும் அது என்ன என்பது பற்றி இப்போதே வெளிப்படையாக கூற விரும்பவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.


« PREV
NEXT »