தற்போதைக்கு தேசிய அரசாங்கத்திற்கு ஆதரவளிக்க முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்களின் பிரதான பிரச்சினைகளுக்கு எவ்வாறான தீர்வுத் திட்டம் வழங்கப்படுகின்றது என்பதனை ஆராய்ந்து பார்க்காமல் தேசிய அரசாங்கத்திற்கு ஆதரவளிக்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மீள்குடியேற்றம், அரசியல் கைதிகளை விடுதலை செய்தல், காணாமல் போனவர்கள் தொடர்பில் விசாரணை நடத்தல் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு வழங்கப்படும் தீர்வின் அடிப்படையில் தேசிய அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறெனினும் தேசிய அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பதன் மூலம் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கிட்டும் என எதிர்பார்க்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.
Social Buttons