இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சகோதரரும் வெலி ராஜூ( மணல் ராஜூ) என்று அழைக்கப்படுபவருமான பிரியந்த சிறிசேன தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்
இந்த சம்பவம் இன்று மாலை பொலநறுவையில் இடம்பெற்றுள்ளது.
கோடரி ஒன்றினால் இவர் தாக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் பொலநறுவை வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பொலநறுவையில் இடம்பெற்று வரும் சட்டவிரோத மணல் அகழ்வு தொடர்பில் ஏற்கனவே ராஜூ மீது குற்றம் சுமத்தப்பட்டு வந்தது.
ஜனாதிபதியும் இந்த விடயத்தில் தமது சகோதரரை எச்சரித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
2ம் இணைப்பு
வெலி ராஜூவை தாக்கியவர் அவருடைய நண்பராவார்
ஜனாதிபதி சகோதரர் ‘வெலி ராஜூ’ என்று அழைக்கப்படும் பிரியந்த சிறிசேனவை தாக்கியவர் அவருடைய நண்பரான லக்மால் என்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
இந்தநிலையில் அவர் பொலநறுவை பிரதேசத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும் அவரை கைதுசெய்ய நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் பொலிஸ் கூறுகிறது.
இந்;தநிலையில் கோடரியால் தாக்கப்பட்ட பிரியந்த சிறிசேன தற்போது மேலதிக சிகிச்சைக்காக கொழும்புக்கு அழைத்து வரப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது..
3ம் இணைப்பு
வெலிராஜூவை தாக்கியவர் சரண்
ஜனாதிபதியின் சகோதரர் வெலி ராஜூ என்ற பிரியந்தவை தாக்கியதாக கூறப்படும் லக்மால் என்பவர் சற்று முன்னர் பொலநறுவை பக்கமுன என்ற இடத்தில் உள்ள பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.
இந்தநிலையில் அவர் விசாரணை செய்யப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
4ம் இணைப்பு
ஜனாதிபதியின் சகோதரர் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றம்
தாக்குதல் சம்பவத்தில் கயாமடைந்த ஜனாதிபதியின் சகோதரர் பிரியந்த சிறிசேன, கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இன்றிரவு 7.00 மணியளவில் பொலனறுவை பிரதேசத்தில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் பிரியந்த சிறிசேன படுகாயமடைந்துள்ளார்.
கயாமடைந்த பிரியந்த சிறிசேன பொலனறுவை வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
சிகிச்சை அளிப்பதற்கான சகல ஏற்பாடுகளும் ஏற்கனவே செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் பிரியந்த சிறிசேனவின் நண்பர் ஒருவரான லக்மால் என்பவரை கைது செய்து விசாரணை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.
பின் தலைப் பகுதியில் கடுமையான காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Social Buttons