Latest News

March 26, 2015

மகிந்தவுக்கு பாதுகாப்பு பிரச்சனையாம்
by admin - 0

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பாதுகாப்பு தொடர்பில் பாரிய பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக அவரது ஊடக பிரிவு இன்று தெரிவித்துள்ளது.  

முன்னாள் ஜனாதிபதியின் ஊடக பிரிவு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பு தொடர்பில் அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன பொய் பிரசாரங்களை முன் எடுத்துள்ளதாக அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு 108 இராணுவ சிப்பாய்களும், 105 காவற்துறை அதிகாரிகளும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் நேற்று தெரிவித்திருந்தார்.

இதுதவிர, 21 வாகனமும் வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.

எனினும், முன்னாள் ஜனாதிபதிக்கு 6 வாகனங்கள் மாத்திரமே வழங்கப்பட்டுள்ளதாகவும், மார்ச் மாதம் 3 ஆம் திகதி முதல் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு எந்தவித வாகனமும் வழங்கப்படவில்லை என முன்னாள் ஜனாதிபதியின் ஊடக இணைப்பு பிரிவு தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு தரப்பினரின் செயற்பாடுகளுக்காக வாகனங்கள் இல்லாதிருப்பது பாரிய பிரச்சினையாக இருப்பதாக அந்த பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
« PREV
NEXT »

No comments