விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீண்டும் கறுப்புப் பட்டியலில் சேர்க்க ஐரோப்பிய ஒன்றியத்துக்கு தமது அரசாங்கம் அழுத்தம் கொடுத்துள்ளதாக கொழும்பில் நேற்று கருத்து வெளியிட்ட, சிறிலங்காவின் பிரதி வெளிவிவகார அமைச்சர் அஜித் பெரேரா தெரிவித்துள்ளார்.
விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு வெளிநாடுகளில் மில்லியன் கணக்கான டொலர் சொத்துகள் இருப்பதாகவும், அந்த நிதியை அவர்கள் உள்நாட்டில் மீண்டும் கெரில்லா போரை ஆரம்பிக்க பயன்படுத்த முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.
“புலிகளின் முன்னணி அமைப்புகள் வெளிநாடுகளில் எரிபொருள் நிரப்பு நிலையங்கள், நவீன சந்தைகள், கப்பல் நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன.
அவர்கள் களத்தில் தோற்கடிக்கப்பட்டிருந்தாலும், மீள ஒருங்கிணையக் கூடிய உண்மையாக ஆபத்து உள்ளது.
சிறிலங்காவின் தற்போதைய பிரதமரான ரணில் விக்கிரமசிங்க கடந்த ஆண்டு விடுத்த வேண்டுகோளை ஏற்று, ஐரோப்பிய ஒன்றியம் கடந்த வாரம் விடுதலைப் புலிகள் மீதான தடையை மீளக் கொண்டு வந்துள்ளது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
No comments
Post a Comment