![]() |
காஜல் அகர்வால் |
காஜல் அகர்வாலுக்கு குத்தாட்டம் போட, வில்லி கதாபாத்திரத்தில் நடிக்க ஆசை வந்துள்ளது. காஜல் அகர்வால் தெலுங்கு, தமிழ் மற்றும் இந்தி படங்களில் நடித்து வருகிறார். அவர் தற்போது தமிழில் தனுஷின் மாரி உள்பட இரண்டு படங்களில் நடித்து வருகிறார். தற்போது அவர் கையில் ஒரு தெலுங்கு படம் கூட இல்லாதது அவருக்கு ஏமாற்றம் அளித்துள்ளதாம். இருப்பினும் தமிழில் நல்ல வரவேற்பு உள்ளதை நினைத்து மகிழ்ச்சியில் உள்ளார் காஜல்.
ஹீரோயினாக நடித்து வரும் காஜலுக்கு திடீர் என்று வித்தியாசமான ஆசை ஏற்பட்டுள்ளது. தற்போது பல படங்களில் குத்தாட்டப் பாடல்கள் உள்ளது. இந்நிலையில் காஜலுக்கு குத்தாட்டம் போட வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டுள்ளது. மேலும் அவர் வில்லத் தனமான கதாபாத்திரங்களில் நடிக்கவும் விரும்புகிறார். குத்துப்பாட்டு, வில்லத்தனமாக கதாபாத்திரங்களுக்கு ஹீரோயின் தேடும் தயாரிப்பாளர்களே, இயக்குனர்களே உங்களை காஜல் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார். ஹீரோவுடன் டூயட் பாடிப் பாடி காஜலுக்கு போர் அடித்துவிட்டது போன்று. அது தான் வித்தியாசமாக நடிக்க முடிவு செய்துள்ளார்.
Social Buttons