உத்தேச 19ம் திருத்தச் சட்டம் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் சற்று முன்னர் பாராளுமன்றில் திருத்தச் சட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையின் தேவையற்ற அதிகாரங்களை வரையறுத்தல் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விடயங்கள் இந்த திருத்தச் சட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
சுயாதீன ஆணைக்குழுக்கள் அமைத்தல், அரசியல் சாசன பேரவையை அமைத்தல் உள்ளிட்ட விடயங்களும் இந்த திருத்தச் சட்டத்தில் அமைக்கப்பட்டுள்ளது. 19ம் திருத்தச் சட்டத்தை அமுல்படுத்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆதரவளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Social Buttons