பொலன்நறுவை மாவட்டத்தில் மின்னேரிய இங்குராக்கொடை போகஹதமன கிராமத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பள்ளிவாசல் உடைப்புத் தொடர்பாக உண்மையான நிவலரத்தைப் பெற்று ஜனாதிபதி மற்றும் பிரதமரின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கவுள்ளோம்.
எனவே சம்பந்தப்பட்ட நபர்கள் முஸ்லிம் சமய காலாசார திணைக்களத்திடம் தொடர்புகொள்ளுமாறு முஸ்லிம் சமய கலாசார அமைச்சர் எம். எச். ஏ. ஹலீம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்
கடந்த காலங்களில் நிகழ்ந்த பள்ளி உடைப்பு, ஹலால் பிரச்சினை போன்ற விடயங்கள் நடப்பதற்கு இனிமேல் இடமளிக்கக் கூடாது.
இதனுடைய உண்மைத் தன்மையைக் கண்டறிந்து சரியான நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது.
இந்த ஆட்சியின் மீது சேறு பூசுவதற்காக மேற்கொள்ளப்படுகின்ற சதி முயற்சிளாகவும் இது இருக்கலாம் ஆகவே அந்தப் பிரதேசத்திலுள்ள முக்கிய நபர்களும் இந்தப் பள்ளிவாசல் நிர்மாணப் பணியில் ஈடுபட்டுள்ள நிறுவனத்தினரும் முஸ்லிம் சமய காலாசாரத் திணைக்களத்திடம் தொடர்பு கொள்ளுமாறு அமைச்சர் ஹலீம் தெரிவித்துள்ளார்.
இந்தப் பள்ளிவாசல்கள் உடைப்புத் தொடர்பாக ஊடகங்கள் மற்றும் தொலைபேசி வாயிலாகவும் தகவல்களைப் பெற்றுக் கொண்ட போதும் பள்ளி கட்டிட நிர்மாணப் பணிகளில் ஈடுபட்ட பள்ளி நிர்வாகத்தினர்ளுடன் தொடர்பு கொள்ள பல முயற்சிகள் மேற்கொண்டோம். ஆனால் அவர்களிடமிருந்து இதுவரை தொடர்பு இணைபப்பினைப் பெற்றுக் கொள்ள முடியவில்லை.
எனவே இந்தப் பள்ளிசல் நிர்வாகத்தினர் முஸ்லிம் சமய கலாசார திணைக்களத்திடம் உடன் தொடர்பு கொள்ளுமாறு வேண்டிக் கொள்வதாக அமைச்சர் ஹலீம் மேலும் தெரிவித்துள்ளார்.
No comments
Post a Comment