Latest News

March 19, 2015

முஸ்லீம் வர்த்தக நிலையத்தில் தீ சதி வேலையா?
by admin - 0

I பம்பலப்பிட்டி யுனிட்டி பிளாஸாவில் 7வது மாடியில் உள்ள கணனி களஞ்சிய சாலையில் இன்று காலை 06.30 மணிக்கு பாரிய தீவிபத்து ஏற்பட்டது.

 

கட்டிடத்திற்கு வெளியே புகை வெளிவருதை அவதாணித்த பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் பம்பலப்பிட்டி பொலிசாருக்கு அறிவித்திருந்தனர்.

 

உடன் தீயணைப்பு படையினர் வரவழைக்கப்டடு தீயை அணைத்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.

 

இக் களஞ்சிய சாலையில் இலக்ரோணிக் பொருட்கள் எரிந்ததால் இரசாயன புகை வெளிவந்து கொண்டே இருந்தது. இதனால் முக சுவாசிக்க ஒட்சிசன் மாஸ்க் அணிந்து தீயணைப்பு படையினர் உட்சென்று தீயை கட்டுப்படுத்தினார்கள்.

 

இக் களஞ்சிய சாலை எரிப்பு எவ்வாறு ஏற்பட்டது. ? என்பது பற்றி பொலிஸ் மற்றும் இராசாயண பகுப்பாளர்கள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

இத் தீ 7வது மாடியில் ஏற்பட்டதால் இக் கட்டிடத்தில் உள்ள ஏனைய 6 மாடி கடைகளும்; பாதுகாக்கப்பட்டன.

 

இவ் இலக்ரோணிக் மற்றும் கணனி களஞ்சயம் ஒரு முஸ்லீம் வர்த்தகருக்குச் சொந்தமானது என கூறப்படுகின்றது.

 

அத்துடன் இக்கடைத் தொகுதியில் அதிகளவில் கணனி வர்த்தக்கத்தில் ஈடுபட்டுவருபவர்கள் முஸ்லிம்கள் ஆவர்.

 

கடந்த வருடம் முஸ்லிம் வர்த்தகருக்கு சொந்தமான ஆடையகம் ஒன்று பாணந்துறையில் தீ பற்றி முற்றாக நாசமானதையும் நாம் அறிந்ததே.

« PREV
NEXT »

No comments