தமிழர்களுக்காக... தமிழ் உறவுகளால் முகநூலில் ஆரம்பிக்கப்பட்ட அதிகாரமிக்க தமிழர் ஆணையத்திற்கு இன்றுடன் ஒரு வயதாகிறது.!!
இருட்டைப்
பார்த்து பழித்துக்கொண்டிருக்காமல் சிறு மெழுகுவர்தியையெனும் ஏற்றி வைக்க
வேண்டும் என்ற துடிப்புடன் முகநூல் (Facebook) கணக்கு ஊடாக உலகெங்கும்
பரந்து வாழுகின்ற உதவுகின்ற உன்னத உள்ளங்களைத் திரட்டி,
சிறுகச் சிறுக பணம் சேர்த்து, இலங்கையில் மிக அவசர நிலையிலுள்ள
வாழ்வாதரங்களை, இழந்து தவிக்கும் போரினால் பாதிக்கப்பட்ட எமது உறவுகளுக்கு
முன்னுரிமை அடிப்படையில் தொழில் உதவி ஏற்படுத்திக்கொடுத்து, அவர்களை தமது
சொந்த உழைப்பில் நிலை நிறுத்திக் கொள்ளவும், சிறைகளில் வாடும் உறவுகளின்
விடுதலைக்காகப் போராடவும் என்று உருவாக்கப்பட்ட ஒரு அமைப்புத்தான் உலகத்
தமிழ்
மக்கள் மறுவாழ்வு உரிமைகள் ஆணையம்.
இவ் ஆணையத்திலுள்ள உறுப்பினர்கள் யாவரும் ஒருவரை ஒருவர் இதுவரை பார்த்துக்கொண்டதில்லை.!!
உதவவேண்டும்
என்ற துடிப்பும், முடியும் என்ற நம்பிக்கையையும் மட்டும் கொண்டு உலகில்
ஒவ்வொர் மூலையிலும், இருந்தாலும் முகநூலின் ஊடாக, இணைந்து தங்கள் உதவிகளை
புரிந்து வருகின்றார்கள் என்பதில் மிக்க மகிழ்வடைகின்றோம்.
vivasaayi |
சத்தமில்லாமல்,
இலங்கையில் "வளர்பிறை" என்ற மக்கள் நல வாழ்வாதாரத் திட்டத்தின் ஊடாக
போரினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் தெரிவு செய்யப்படும் ஒரு பயனாளிக்கு
ஒரு இலட்சம் ரூபாவினை வாழ்வாதார நிதிக்காக வழங்கி வருவதனை யாரும்
அறிந்திருக்கமாட்டிர்கள்... ஏனெனில், ஆடம்பரங்களற்று அமைதியாகவே தனது
சேவையை செய்து கொண்டிருக்கிறது, இந்த தமிழர் ஆணையம். பாதிக்கபட்ட
மக்களுக்கு கரம் கொடுத்து அவர்களுக்கான குடும்ப நிலமையினை ஆராய்ந்து
ஆலோசனை வழங்குவதுடன் தொழில் ஒன்றினை ஆரம்பிப்பதற்காக ஒரு இலட்சம் ரூபாய்
பணத்தினை வழங்கி வருகின்றது
01.04.2015 அதாவது இன்று ஒரு
வருடத்தினை பூர்த்தி செய்யும், இவ் ஆணையமானது எங்கெல்லாம்
பாதிக்கப்பட்டவர்கள், இருக்கின்றார்களோ அங்கெல்லாம அதன் சேவையை விரித்துக்
கொள்ளும் என்பதில் ஜயம் இல்லை.
தனக்கென்று ஒரு நிரந்தர அலுவலகமோ எந்தவிதமான பணமீகுதியோ இல்லாமல் ஒவ்வொரு
பயனாளிக்குமான பணத்தினை இவ் ஆணையத்தில் உள்ள உறுப்பினர்கள் மட்டுமே
வழங்குவார்கள் வெளியிலிருந்து பணம் சேகரிக்கப்படமாட்டாது.! குறிப்பிட்ட
தொகை பணத்தினை சேகரித்து பயனாளிக்கு வழங்கியபின் அடுத்த பயணாளி தெரிவு
இடம்பெறும்.
இவ்வளவுதான் கொடுக்க வேண்டும் என்றில்லாமல் சிறு துளி
பெரு
வெள்ளம் என்ற கருப்பொருளின் படி முடிந்தளவு அது ஆயிரம் ரூபாய் என்றாலும்
அந்த உதவி ஏற்கப்பட்டு அந்தப் பண உதவி போய்ச் சேருகின்ற நபருக்கும்
உதவியவரின் பெயரும் தெரிவிக்கப்படும் நிலை இங்கு பிரதானமாகும். தவறுகள்
இடம்பெறாமல் இருக்க வேண்டும் என்பதற்காகவும் எல்லோருக்கும் யாவும் தெரிய
வேண்டும் என்பதற்காகவுமே. இந்த நடைமுறையும் பதிவிடுதல்களும் மிகச்சிறந்த
முறையில் உறுப்பினர்கள் எல்லோரது கருத்துக்களும் செவி மடுக்கப்பட்டு
கலந்துரையாடப்பட்டு மிக நேர்த்தியான முறையில் செயற்பாடுகள் இங்கே
நடைமுறைப்படுத்தப்படுகின்றன.
ஒரு வட்ட மேசையில் உட்கார்ந்திருந்து
இவை தீர்மானிக்கப்படுவதில்லை. ஒட்டு மொத்த உறுப்பினர்களும் ஒரே ஒரு முகநூல்
குழு உரையாடலில் கலந்துரையாடி செயற்பட்டு வரும் இந்த ஆணையத்தின் வெளிக்கள
செயற்பாடுகள், இலங்கையில் உள்ள உறுப்பினர்களால் நிறைவேற்றப்படுகின்றன.
புலம்பெயர்
உறவுகள் மட்டுமன்றி தமிழ்நாட்டு உறவுகளும் இவ் ஆணையத்தில் உறுப்பினர்களாக
உள்ளனர் என்பது மிகவும் மகிழ்ச்சியான ஒன்று. அந்தவகையில் பண உதவி
மட்டுமன்றி புலம்பெயர்ந்து வாழவென்று பயணம் தொடங்கி இந்தியா, இந்தோனேசியா,
துபாய், தாய்லாந்து மற்றும் கனடா போன்ற நாடுகளில் சிறைகளில்
வாடும் எமது தமிழ் உறவுகளின் விடுதலைக்காக அந்தந்த நாடுகளின் அரசுகளோடு
பேச்சுவார்த்தை நடாத்தவும் அவர்களின் விடுதலைக்காகப் போராடவும் அவர்களது
வலிகளை வெளியுலகிற்கு கொண்டுவரவும் பின்னிற்பதில்லை அதாவது பாதிக்கப்பட்ட
தமிழ் மக்களுக்கு உதவுவது மட்டுமே இந்த ஆணையத்தின் முதன்மை குறிக்கோள்
ஆகும்.
உலகத் தமிழ் மக்கள் மறுவாழ்வு உரிமைகள் ஆணையமானது முகநூல்
ஊடாக ஆரம்பிக்கப்பட்டு முகநூல் ஊடாகவே உதவுகின்ற உறவுகளை ஒன்றிணைத்து
முகநூல் ஊடாகவே பாதிக்கப்பட்டவர்களுக்கு நேரடியாக உதவிகளை வழங்கி
வருவதென்பது ஒரு முகநூல் புரட்சியாகும்.
காரணம், முகநூல் ஊடாகவே சகல
ஒழுங்கமைப்பையும் ஒரு குழு உரையாடல் (Group chat) மூலமாக அனைத்து
உறவுகளையும் ஒன்றிணைத்து, அதன் ஊடாக சுதந்திரமாகச் செயற்படுவதற்கு
தமிழ்நாட்டில் சட்டரீதியாக
ஆணையத்தைப் பதிவு செய்து கடந்த 16.07.2014 அன்று திரு. பழ.நெடுமாறன் ஐயா
அவர்களால் ஆணையத்திற்கான கிளை அலுவலகம் ஒன்று உத்தியோகபூர்வமாக திறந்து
வைக்கப்பட்டதானது, இவ் ஆணையத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வரவேற்பாகும்.
இன்றுடன்
(01.04.2015) ஒரு வருடம் பூர்த்தியடைந்த நிலையில் பலருக்கு தன் சேவைகளை
குறைவின்றி மகிழ்வோடு வழங்கியுள்ளது. அந்த ஒரு வருட நினைவுகளிலிருந்து...
■
ஆணையம் ஆரம்பிக்கப்பட்டு முதன்முதலாக முல்லைத்தீவு மாவட்டம் குமாரபுரம்
முள்ளியவளையில் வசித்து வருபவரான திரு.சத்தியமூர்த்தி (வயது 40)
என்பவருக்கு தனது முதற்கட்ட உதவியினை ஆரம்பித்தது. இவர் கடந்த 2009 ஆம்
ஆண்டு நடந்து முடிந்த முள்ளிவாய்க்கால் யுத்தத்தினால் தனது இரு கால்களையும்
இழந்து தனது மனைவியையும், தனது ஐந்து சிறு வயது குழந்தைகளையும் காப்பாற்ற
முடியாமல்
வாழ்க்கையோடு போராடி வந்தவர்.
அதன் அடிப்படையில் அவருக்கு பிடித்த
தொழிலாக ஆடு வளர்ப்புத் திட்டத்தினை ஊக்கப்படுத்தி ஆரம்ப கட்டமாக ஒரு
இலட்சத்து ஒன்பதினாயிரத்து நானூற்று இருபத்தொன்பது ரூபாக்களை 19.04.2014
அன்று உலகத் தமிழ் மக்கள் மறுவாழ்வு உரிமைகள் ஆணையம் வழங்கி உதவி
புரிந்துள்ளது.
■ இரண்டாவது உதவியாக பல வருடங்களின் முன் வாகன
விபத்தொன்றில் தலையினில்
அடிபட்டு உடல் செயலற்று நடக்க முடியாமல் படுத்த படுக்கையாக சிகிச்சையின்றி
மிகவும் வறுமையில் வாழ்ந்து வந்த திரு. சுபன் (வயது 29) என்பவரின்
மருத்துவ சிகிச்சைக்காக ஒரு இலட்சம் இலங்கை ரூபாக்களை 03.05.2014 அன்று
உலகத் தமிழ் மக்கள் மறுவாழ்வு உரிமைகள் ஆணையம் வழங்கி உதவி புரிந்துள்ளது.
■ மூன்றாவது உதவியாக கடும் வயிற்று வலியினால் அவதிப்பட்டு கடந்த
ஆண்டு அதாவது 17.04.2014
அன்று சென்னை போரூர் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்ட நித்தியானந்தன்
விஜயாகரன் என்ற பன்னிரு வயது சிறுவனுக்கு பித்தப்பையில் கல் இருப்பதாகவும்,
உடனடியாக சத்திர சிகிச்சை மேற்கொண்டு அக்கல்லினை அகற்ற வேண்டும் என்றும்
மருத்துவரால் அறிவுறுத்தப்பட்டதனால். அதற்குரிய பணத்தினை திரட்ட முடியாத
குடும்ப சூழலினைக்கொண்ட அச்சிறுவனுக்கு அவசர மருத்துவ சிகிச்சைக்காக
முப்பத்தைந்தாயிரத்து ஐந்நூறு இந்திய ரூபாக்களை (35,500) 06.05.2014 அன்று
உலகத் தமிழ் மக்கள் மறுவாழ்வு உரிமைகள் ஆணையம் வழங்கி உதவி
புரிந்துள்ளது.
■ நான்கவது உதவியாக .இறுதி யுத்தத்தில்
எறிகணைத்தாக்குதலில் தன் கணவனை இழந்த வவுனியா கனகராயன் குளத்தினை
வசிப்பிடமாகக் கொண்ட திருமதி. பிரபாகரன் சிவகுமாரி அவர்கள் இறுதிப்போரில்
எறிகணை வீச்சின் போது விழுந்து எழுந்ததால்
வயிற்றில் பலமான அடி பட்டு மிகக்கடினமான வேலைகளை செய்ய முடியாது தவித்து
வந்துள்ளதோடு தனது இரு பிள்ளைகளையும் மிகக் கடினப்பட்டு எந்தவொரு உதவிகளும்
வாழ்வாதாரங்களும் இன்றி தனியே வளர்த்து வந்த நிலையில் அவரை இனங்கண்டு
கொண்ட உலகத் தமிழ் மக்கள் மறுவாழ்வு உரிமைகள் ஆணையம் அவருக்கான வாழ்வாதார
நிதியாக அதாவது தொழில் முயற்சிக்கான ஆரம்ப கட்ட நிதியாக ஒரு இலட்சம்
இலங்கை ரூபாய்களை 14.06.2014 அன்று வழங்கி உதவி புரிந்துள்ளது.
■
ஐந்தாவது உதவியாக கிளிநொச்சி ஆனந்தபுரம் கிழக்கினைச் சேர்ந்த திரு
நவரத்தினம் என்கின்ற 67 வயதான கூலி வேலை செய்து சீவித்து வந்த முதியவருக்கு
காலில் ஏற்பட்ட எக்சிமா நோய் காரணமாக வேலைகள் செய்ய முடியாத நிலையில்
தனக்கான வாழ்வாதரம் இன்றி மனைவி மற்றும் இரு பெண் பிள்ளைகளுடன் தவித்து
வந்தார்.
இவரது
இரு பிள்ளைகள் மண் மீட்பிற்காக போராடி இறைபதம் அடைந்த நிலையில் 58 வயதான
அவரது மனைவியாரும் ஒரு வித பங்கசு நோயினால் இடுப்புப் பகுதி பாதிக்கப்பட்டு
படுத்த படுக்கையாகி இருந்தார். மிகக் கடினப்பட்டு எந்தவொரு உதவிகளும்
வாழ்வாதாரங்களும் இன்றி தனியே தவித்து வந்த நிலையில் அவரை இனங்கண்டு கொண்ட
உலகத் தமிழ் மக்கள் மறுவாழ்வு உரிமைகள் ஆணையம் அவருக்கான வாழ்வாதார
நிதியாக அதாவது தொழில் முயற்சிக்கும் அவரது மனைவிக்கு மருத்துவ
சிகிச்சைக்கும் உதவி நிதியாக ஒரு இலட்சம் இலங்கை ரூபாய்களை 23.08.2014
அன்று வழங்கி உதவி புரிந்துள்ளது.
■ ஆறாவது உதவியாக இறுதி
யுத்தத்தில் பாதிப்புற்ற ஒட்டுசுட்டானைச் சேர்ந்த திரு. தெய்வேந்திரன்
முத்துலிங்கம் என்கின்ற 39 வயதான நாட்டுக்கான பணியின் நிமித்தம் அவயம்
இழந்து வேலைகள் செய்ய முடியாத
நிலையில் தனக்கான வாழ்வாதரம் இன்றி மனைவி மற்றும் இரு பெண் பிள்ளைகளுடன்
தவித்து வந்தார்.
இவரது மனைவியும் முள்ளந்தண்டு பகுதியில் ஏற்பட்ட
பாதிப்பினால் இடுப்பிற்கு கீழே செயற்பட முடியாத நிலையில் இரு பிள்ளைகளுடன்
அன்றாட வாழ்வின் சீவனத்திற்கு பெரும் பாடுபட்டு வந்த வேளையில் இனங்கண்டு
கொண்ட உலகத் தமிழ் மக்கள் மறுவாழ்வு உரிமைகள் ஆணையம் அவருக்கான
வாழ்வாதார நிதியாக அதாவது தொழில் முயற்சிக்குரிய உதவி நிதியாக ஒரு இலட்சம்
இலங்கை ரூபாய்களை 27.09.2014 அன்று வழங்கி உதவி புரிந்துள்ளது.
■
ஏழாவது உதவியாக மானிப்பாய் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த திரு. எஸ். சஞ்சீவ்
என்கின்ற சகோதரன் விபத்தில் அவயம் இழந்து தந்தையினையும் இழந்து வேலை
வாய்ப்பின்றி வாழ்வினை நகர்த்த முடியாமல் அல்லல் பட்டு வந்தார். இவரது இரு
சகோதரிகள்
கல்வி கற்றுக்கொண்டு இவரை நம்பி வாழ்வதும் வயதான இவரது தாயாரையும் பேண
வேண்டிய பொறுப்பில் இவர் இருப்பதும் குறிப்பிடத்தக்க விடயம் ஆகும்.
மிகக்
கடினப்பட்டு எந்தவொரு உதவிகளும் வாழ்வாதாரங்களும் இன்றி தனியே தவித்து
வந்த நிலையில் அவரை இனங்கண்டு கொண்ட உலகத் தமிழ் மக்கள் மறுவாழ்வு உரிமைகள்
ஆணையம் அவருக்கான வாழ்வாதார நிதியாக அதாவது முச்சக்கர வண்டி ஒன்றினை
கடன் அடிப்படையில் கொள்வனவு செய்வதற்கான ஒரு இலட்சம் ரூபாவினை 28.10.2014
அன்று வழங்கி உதவி புரிந்துள்ளது.
■ எட்டாவது உதவியாக மன்னார்
திருக்கேதீச்சரத்தை சேர்ந்த போரின் போது தனது கணவனை இழந்து நான்கு
குழந்தைகளுடன் பொருளாதாரத்திற்காய் போராடிக்கொண்டிருந்த திருமதி. தனலட்சுமி
என்பருக்கு ஒரு இலட்சம் ருபாவினை 10.01.2015 அன்று வழங்கி உதவி
புரிந்துள்ளது.
■ ஒன்பதாவது
உதவியாக வவுனியா நெளுக்குளத்தை சேர்ந்த திரு டயஸ்குமார் என்பவர் மண்
மீட்பிற்காக போராடிய வேளையில் இடுப்பின் கீழ் படுகாயமடைந்து எழும்பி நடமாட
முடியாத நிலையில் படுத்த படுக்கையிலிருக்கும் போதே படுக்கை புண் உருவாகி
மிகவும் வலிகளுடன் சிரமப்பட்டு வந்த வேளை, அவரை இனங்கண்டு கொண்ட உலகத்
தமிழ் மக்கள் மறுவாழ்வு உரிமைகள் ஆணையமானது அவருக்கான வாழ்வாதார நிதியாக
அதாவது அவரின் பெற்றோரின் தொழில் முயற்சிக்காக ஒரு இலட்சம் இலங்கை
ரூபாய்களை 07.03.2015 அன்று வழங்கி உதவி புரிந்துள்ளது.
இன்று
முகநூல் ஊடாக இந்தளவிற்கு சாத்தியப்பட வைத்து, பெரு விருட்சமாக வளர்ச்சி
பெற்று நிற்கும் இந்த ஆணையத்தின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தது
மட்டுமன்றி பல வகையான வேலைச் சுமைகளுக்கு மத்தியிலும் அயராது உழைத்து
தங்களால் இயன்ற பண உதவிகளை
மகிழ்வோடு வழங்கி வருகின்ற அனைத்து ஆணைய உறவுகளுக்கும்...
மற்றும்,
ஆணையம் செய்த உதவிகளையும்... ஆணையத்தின் செய்திகளையும் தங்களது
இணையங்களில் பதிவிட்டு ஊக்கம் தந்து கொண்டிருக்கின்ற அனைத்து தமிழ்
ஊடகங்களுக்கும்... தனது நெஞ்சார்ந்த நன்றிகளை உலகத் தமிழ் மக்கள் மறுவாழ்வு
உரிமைகள் ஆணையம் மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கின்றது.
இதுமட்டுமன்றி
இவ்வாறு பல
உதவிகளோடு பசியென்று கேட்கின்ற பாலகனின் முகம் பார்த்து அழுது வடிக்கின்ற
அவலநிலை மாற்றிட அனைத்துத் தமிழர்களின் கரம் பற்றி உதவிட்டு வருகின்ற
உலகத்தமிழ் மக்கள் மறுவாழ்வு உரிமைகள் ஆணையமானது...
ஒராண்டினை
நிறைவு செய்யும் இந் நன் நாளில் இன்னும் பல சேவைகள் ஊடாக பணி செய்ய
அனைத்தும தமிழ் உறவுகளின் ஆதரவையும் அன்போடு எதிர்பார்த்து ஆவலோடு
காத்திருக்கிறது.
உங்கள் அனைவரது வாழ்த்துக்களையும் பெற்ற பெரு
மகிழ்ச்சியில்... மகிழ்வோடும், நன்றியுணர்வோடும் தலை நிமிர்ந்து நிற்கிறது,
உலகத் தமிழ் மக்கள் மறுவாழ்வு உரிமைகள் ஆணையம்.
"அன்பினால் அனைவரையும் அரவணைப்போம்"
Social Buttons