Latest News

March 31, 2015

ஆவணப்படத்தை தயாரிக்க ஒத்துழைப்பு வழங்கிய நபர் நாட்டை விட்டு வெளியேற தடை!
by Unknown - 0


இலங்கை இராணுவத்திற்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் ஆவணப்படமொன்றை தயாரிக்க உதவிய சந்தேக நபர் நாட்டை விட்டு வெளியேறத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அரசாங்கத்திற்கும், இராணுவத்திற்கும் இழுக்கு ஏற்படும் வகையில் செனல்4 ஊடகம் ஆவணப்படமொன்றை தயாரித்ததாக கொழும்பு ஊடகமொன்று குற்றம் சுமத்தியுள்ளது.

இந்த ஆவணப்படத்தை தயாரிக்கும் பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கிய நபர் நாட்டை விட்டு வெளியேறக் கூடாது என கொழும்பு மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆவணப்படத்தை தயாரிக்கப் பயன்படுத்தப்பட்ட உபகரணங்களையும் கையகப்படுத்துமாறு நீதிமன்றம் அறிவித்துள்ளது.

படையினருக்கு எதிராக ஆவணப்படத்தை தயாரிக்க உதவிகளை வழங்கியதாக ராமநாதன் என்பவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த ஆவணப்படம் அரசாங்கத்திற்கும் படையினருக்கும் இழுக்கு ஏற்படும் நோக்கில் தயாரிக்கப்பட்டதா? இணையத்தின் ஊடாக இந்த ஆவணப்படம் பகிரப்பட்டுள்ளதா? வேறு நாடுகள் மற்றும் நபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதா என்பது குறித்து ஆராய மொரட்டுவ பல்கலைக்கழக கணனிப் பிரிவின் ஒத்துழப்பு பெற்றுக்கொள்ளப்பட உள்ளது.

விசாரணைகள் பூர்த்தியாகும் வரையில் ராமநாதனை வெளிநாடு செல்ல அனுமதிக்க வேண்டாம் என குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதவானிடம் கோரியுள்ளனர்.

ராமநாதனுடன் மேலும் சிலர் கைது செய்யப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
« PREV
NEXT »