விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு வழங்குவது பிரித்தானியாவில் குற்றமாகும் என்று இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகரக பேச்சாளர் தெரிவித்துள்ளார் என இலங்கையின் ஆங்கில செய்தித்தாள் ஒன்று தெரிவித்துள்ளது.
பிரித்தானியாவில் விடுதலைப் புலிகள் இயக்கம் தடைசெய்யப்பட்ட இயக்கமாகும்.
எனவே அதற்கு ஆதரவை வெளிப்படுத்த முடியாது. அது பிரித்தானிய சட்டப்படி குற்றமாகக் கருதப்படும்.
ஐ.நா விசாரணை தாமதமானமைக்காக அண்மையில் பிரித்தானியாவில் அமெரிக்க தூதரகத்துக்கு முன்னாள் மேற்கொள்ளப்பட்ட பேரணியின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனும் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஆகியோரின் உருவப் பொம்மைகளும் எரியூட்டப்பட்டன. இவ்வாறு உருவப்பொம்மைகள் எரிப்பது சட்டத்துக்கு மீறிய செயல் என பிரித்தானிய பொலிஸாரும் தெரிவித்துள்ளனர் என இவர் தெரிவித்துள்ளார்
இந்த பேரணி தொடர்பிலேயே உயர்ஸ்தானிகரக பேச்சாளர் தமது கருத்தை வெளியிட்டுள்ளார்.
அமெரிக்க தூதரகத்துக்கு முன்னாள் விடுதலைப்புலிகளுக்கு சார்பாக நடத்த ஆர்ப்பாட்டம் என்று கூற முற்படுகிறார். ஆனால் அது தமிழ் மக்களுக்கு நீதி வேண்டிய ஜனநாயக போராட்டம் என்பது அவருக்கு விளங்கவில்லை. அத்துடன் இந்த எச்சரிக்கையை விடுப்பதால் இனிவரும் ஆர்ப்பாட்டங்களில் மக்கள் ஈடுபடுவதை தடுக்கும் மற்றும் சம்பந்தன் சுமந்திரன் அவர்களுக்கு எதிரான செயற்பாடுகளை தடுக்கவும் இலங்கை தூதர் முற்படுகிறார் இதனால் சிங்கள அரசுடன் இணைந்து தமிழின விரோத செயற்பாடுகளில் சம்பந்தன், சுமந்திரன் போன்றவர்கள் ஈடுபடுவது தமிழ்மக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது .
Social Buttons