![]() |
SHOOT |
மாங்குளம் பகுதியில் (26/03/2015)நேற்று முன்தினம் இரவு ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் சந்தேகத்தின் பேரில் ஒருவரை மறித்து சோதனை செய்ய முற்பட்டனர். இதன்போது குறித்த இளைஞன் தப்பிச்செல்ல முனைந்தபோது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு காயமடைந்தவரிடம் கஞ்சா பொதியொன்று காணப்பட்டதாகவும் ஆவரங்கால் புத்தூரை சேர்ந்த தட்சணாமூர்த்தி தர்சன் (வயது26) என்பவரே இவ்வாறு காயமடைந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.பொலிஸாரின் இந்த நடவடிக்கை அந்த இளைஞர் மீது பழிதீர்க்க அவர்மீது கஞ்சா கொண்டு சென்ற ஒரு கதையை திருப்பியதாக பொதுமக்கள் கருத்து தெரிவித்தனர்.
Social Buttons