Latest News

March 11, 2015

முன்னாள் பெண்போராளி கடத்தப்பட்டுள்ளார்.
by admin - 0

விடுதலைப்புலிகளது முன்னாள் பெண்போராளியொருவர் இன்று காலை புதுக்குடியிருப்பில் வைத்து கடத்தப்பட்டுள்ளார்.மோட்டார் சைக்கிள்களில் வந்த நபர்களே குறித்த யுவதியான முன்னாள் பெண்போராளியினை கடத்தி சென்றுள்ளனர்.அவ்வாறு கடத்தப்பட்டவர் கைவேலி பகுதியினை சேர்ந்தவரான விசுவலிங்கம் வினோதினி(வயது 26) என அடையாளப்படுத்தப்பட்டுள்ளார்.

தற்போது சிவில் பாதுகாப்பு படைப்பிரிவில் இணைக்கப்பட்டுள்ள அவர் படையினரின் கண்காணிப்பில் இயக்கப்படும் சிறார்களிற்கான முன்பள்ளியொன்றில் கல்வி கற்பித்து வந்துள்ளார்.
இன்று காலை வழமை போலவே முன்பள்ளிக்கு சென்று கொண்டிருந்த அவரை இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்திருந்த நபர்கள் தாக்கிய பின் தமது மோட்டார் சைக்கிளில் தூக்கி சென்றுள்ளனர்.மயக்கமுற்ற நிலையில் காலை வேளை குறித்த முன்னாள் போராளி கடத்தி செல்லப்பட்டவேளை இலங்கை காவல்துறையும் அப்பகுதியில் பொதுமக்களும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இறுதி யுத்தத்தில் சரணடைந்த விடுதலைப்புலிகளது போராளிகளில் சுமார்; பத்தாயிரம் பேர் வரையினில் புனர்வாழ்வு அளிக்கப்பட்ட பின்னர் மீள செயற்படாதிருப்பதை உறுதிப்படுத்த படைத்தரப்பினால் உருவாக்கப்பட்ட சிவில் பாதுகாப்பு குழுவினில் இணைத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
« PREV
NEXT »