![]() |
vavuniya |
வவுனியா பேயாடிகூழாங்குளத்தில் இராணுவத்தினரின் 56 ஆவது படைப்பிரிவு உள்ள காணியை இராணுவத்தினருக்கு கொடுக்க முடியாது என காணி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
வவுனியா பேயாடிகூழாங்குளத்தில் அமைந்துள்ள 8 பேருக்கு சொந்தமான சுமார் 30 ஏக்கர் காணியை இராணுவ தேவைக்காக சுவீகரிப்பதாக விசேட காணி சுவீகரிப்பு உத்தியோகத்தரால் ஒரு வருடத்திற்கு முன்னர் அறிவித்தல் வழங்கப்பட்டிருந்தது.
இந் நிலையில் அவர்கள் சட்ட உதவியை நாடியுள்ள நிலையில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை 17 ஆம் திகதி இராணுவ தேவைக்காக சுவீகரிக்க நில அளவை செய்யப்படவுள்ளதாக காணி உரிமையாளர்களுக்கு கடிதம் மூலம் தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந் நிலையிலேயே தமது காணிகளை சுவீகரிப்பதற்கு அனுமதிக்க முடியாது எனவும் புதிய அரசு பொது மக்களின் காணியை அவர்களிடம் கையளிப்பதாக தெரிவித்த நிலையில் மீண்டும் காணிகளை சுவீகரிக்கும் செயற்பாடு தமக்கு கவலையளிப்பதாகவும் காணி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Social Buttons