Latest News

February 16, 2015

ஶ்ரீரங்கம் அதிமுக அமோக வெற்றி
by admin - 0

ஸ்ரீரங்கம்: ஸ்ரீரங்கம் இடைத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் எஸ். வளர்மதி அமோக வெற்றி பெற்றார். தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் ஆனந்த்தை அவர் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார். ஸ்ரீரங்கம் சட்டசபைத் தொகுதிக்கு பிப்ரவரி 13ம் தேதியன்று இடைத் தேர்தல் நடைபெற்றது. பெரிய அளவில் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் நடந்து முடிந்த இந்த வாக்குப் பதிவின்போது, 81.83 சதவீத வாக்குகள் பதிவாகின. பதிவான வாக்குகள் திருச்சி - மதுரை சாலையில் பஞ்சப்பூரில் உள்ள சாரநாதன் பொறியியல் கல்லூரி வளாகத்தில் எண்ணப்பட்டு வருகின்றன. பாதுகாப்பாக 

இன்று அங்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. காலை 8 மணிக்கு வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது. 14 மேஜைகள் போடப்பட்டு அதில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. மொத்தம் 23 சுற்றுகளாக வாக்குகள் எண்ணிக்கை நடைபெற்றது. 


அதிமுக சார்பில் எஸ். வளர்மதி, திமுக சார்பில் என். ஆனந்த், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் அண்ணாதுரை, பாஜக சார்பில் சுப்பிரமணியம், சமூக சேவகர் டிராபிக் ராமசாமி உள்ளிட்ட வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் முதல் சுற்றிலிருந்தே அதிமுக வேட்பாளர் எஸ். வளர்மதி முன்னிலையில் இருந்து வந்தார். எந்த சுற்றிலும் திமுக வேட்பாளருக்கு முன்னிலை கிடைக்கவில்லை. இறுதியாக அதிமுக வேட்பாளர் எஸ். வளர்மதி அமோக வெற்றி பெற்றார். 
« PREV
NEXT »

No comments