Latest News

February 14, 2015

தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள மாகாணசபையின் தீர்மானம்.
by Unknown - 0

இலங்கையில் நிகழ்ந்த இறுதிப்போரின்போது இடம்பெற்ற இனப்படுகொலையயன வட மாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை இலங்கை அரசு உடனடியாகவே நிராகரித்துள்ளது. இது தொடர்பாகக் கருத்து வெளியிட்ட அமைச்சரவைப் பேச்சாளரும் சுகாதார அமைச்சருமான ராஜித சேனாரத்ன இனப்படுகொலை என்ற வார்த்தையை அரசு ஏற்கப் போவதில்லையயனத் தெரிவித்துள்ளார்.

போரின்போது மனித இழப்புக்கள் இடம்பெற்றதை ஒப்புக் கொண்ட ராஜித சேனாரத்ன புலிகள் மக்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தியதன் காரணமாகவே இது ஏற்பட்ட தெனவும் விளக்கமளித்துள்ளார்.

ஆகவே, இனப்படுகொலை இடம்பெற்றிருந்தால்கூட அதற்குப் புலிகள் இயக்கமே பொறுப்பேற்க வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இந்திய அரசும் வடமாகாண சபையில் நிறை வேற்றப்பட்டுள்ள தீர்மானத்தைக் கண்டித்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அடுத்த மாதம் ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கைக்கு எதிரான அறிக்கை சமர்ப்பிக்கப்படும் போது இந்தியா நழுவல்போக்கைக் கடைப்பிடிக்குமென்பது உறுதியாகிவிட்ட நிலையில் இந்திய அரசு வடமாகாண சபையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் தொடர்பாகத் தனது கருத்துக்களைத் தெரிவித்துள்ளது.

இலங்கையில் இடம்பெற்ற இனப் படுகொலைக்கு நீதி வேண்டும் என்னும் தொனிப்பொருளில் பிரித்தானிய தமிழர் பேரவையின் ஏற்பாட்டில் தமிழர்களுக்கான நீதிகோரிய சந்திப்பு ஒன்று கடந்த 29 ஆம் திகதி இடம்பெற்றுள்ளது. இதில் பிரிட்டிஷ் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், அயர்லாந்து நிழல் அமைச்சர், பிரிட்டிஷ் எதிர்க் கட்சித் தலைவர், வட அயர்லாந்துக்கான அமைச்சர், ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் உறுப்பினர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

இங்கு உரையாற்றிய அனைவரும் இலங்கையில் இடம்பெற்றது இனப்படுகொலைதான் என்றும், உடனடியாக இது தொடர்பாக சர்வதேச விசாரணைகள் ஆரம்பிக்கப்பட வேண்டுமெனவும் வற்புறுத்திக் கேட்டுக்கொண்டனர்.

நிலைமை இவ்வாறிருக்க இலங்கை மற்றும் இந்திய அரசுகள் இலங்கைத் தமிழ் மக்களின் மனவுணர்வுகளைச் சிறிதும் கவனத்தில் கொள்ளாது அவர்களுக்கு எதிராகச் செயற்படுவதைக் காணமுடிகின்றது. இலங்கையில் இடம்பெற்ற இனஅழிப்பு நடவடிக்கையில் இந்தியாவின் பங்கும் நிறையவே உள்ளது.

புலிகளை வஞ்சம் தீர்க்கின்றோம் என்ற எண்ணத்துடன் இலங்கைக்குத் தேவையான சகல உதவிகளையும் வழங்கிய இந்தியா அப்பாவித் தமிழர்களின் உயிர்களை ஒரு பொருட் டாகவே மதிக்கவில்லை. மாறாக இலங்கை அரசின் செயல்களை நியாயப்படுத்தவே முனைந்தது. கடந்த ஆண்டு ஐ.நா.மனித உரிமைகள் சபையில் இலங் கைக்கு எதிரான பிரேரணை வாக்கெடுப்புக்கு விடப்பட்ட போது அதில் கலந்துகொள்ளாது இலங்கையைக் காப்பாற்றும் முயற்சிகளில் இந்தியா ஈடுபட் டது. இலங்கைத் தமிழர்களைப் பொறுத்த வரையில், அவர்கள் தமது தாய்நாடெனக் கருதும் இந்தியாவே துரோகமிழைப்பது ஒருபோதுமே ஏற்றுக்கொள்ள முடியாததொன்றாகும்.

இதேவேளை – ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலை மையிலான அரசு முன்னாள் ஜனாதிபதி உட்பட போர்க்குற் றம் புரிந்த அனைவரையும் காப்பாற்றும் முயற்சியில் தீவிர மாக ஈடுபட்டுள்ளது. இதன் ஓர் அங்கமாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர வெளிநாடுகளுக்குப் பறந்து சென்றுள்ளார். அடுத்த மாதம் ஐ.நா. மனித உரிமைகள் சபையில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படும் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஒத்திப்போடும் வகையிலான இராஜதந்திர நகர்வுகளை அவர் மேற்கொண்டு வருகிறார். அமெரிக்காவும் இதற்குச் சாதகமான வகையில் நடந்து கொள்ளுமென்பதால் இலங்கையின் எதிர்பார்ப்பு இலகுவாக நிறைவேறிவிடும்.

ஆனால், வெளிநாடுகள், முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் நகல்தான் மைத்திரி பால சிறிசேன என்பதைப் புரிந்து கொள்ளத் தவறியமை அவற்றின் இராஜதந்திரத்துக்குக் கிடைத்த தோல்வி என்பதை இங்கு குறிப்பிடத்தான் வேண்டும். சிலவேளை மஹிந்தவையும் அவரைச் சார்ந்தவர்களையும் காப்பாற்றும் பொருட்டு மைத்திரி ஜனாதி பதிப் பதவியை ஏற்றுக்கொண்டாரா என்ற சந்தேகமும் எழுகின்றது.

எது எப்படியோ மைத்திரிக்கு வாக்களித்து அவரை அரியணையில் அமரச் செய்த தமிழ்த் தேசியத் தலைவர்களும், தமிழர்களும் மீண்டுமொரு தடவை ஏமாற்றப்பட்டுள்ளனர் என்பது தான் உண்மை.

நன்றி சுடர் ஒளி 
« PREV
NEXT »