Latest News

February 23, 2015

விமல் வீரவங்சவுக்கு சி.ஐ.டியினர் அழைப்பு!
by Unknown - 0

விசேட வாக்குமூலமளிப்பதற்கு தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவங்சவை கொழும்பிலுள்ள குற்றப்புலனாய்வு பிரிவுக்கு சமூகமளிக்குமாறு குற்றப்புலனாய்வு பிரிவினர் அழைத்துள்ளனர்.

இன்று திங்கட்கிழமை காலை 9.50க்கு சமூகமளிக்குமாறே விமல் வீரவங்சவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

2010ஆம் ஆண்டு இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் அளிப்பதற்காக சமூகமளிக்குமாறே அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப்பேச்சாளர் மொஹமட் முஸமில் தெரிவித்தார்.
« PREV
NEXT »