Latest News

February 17, 2015

புலி படத்தில் 3 வேடத்தில் நடிக்கிறார் விஜய்
by Unknown - 0

கத்தி’ படத்திற்கு பிறகு விஜய், சிம்பு தேவன் இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு புலி என்று பெயர் வைத்திருக்கின்றனர். விஜய்க்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன், ஹன்சிகா மொத்வானி ஆகியோர் நடிக்கின்றனர். ஸ்ரீதேவி கபூர், நான் ஈ சுதீப் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.

இப்படத்தில் விஜய் இரண்டு வேடத்தில் நடிக்கிறார் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. ஆனால், தற்போது இப்படத்தில் விஜய் மூன்று வேடத்தில் நடிப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. சரித்திர கால திரைப்படமாக உருவாகிவரும் இதில் விஜய், தளபதி மற்றும் கார்ட்டூனிஸ்ட் என இரு வேறு கெட்டப்புகளில் நடிக்கிறார் என்றும், 

மூன்றாவது கெட்டப்பை படக்குழுவினர் ரகசியமாக வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. சில வாரங்களுக்கு முன்பு ‘புலி’ படத்தின் படப்பிடிப்பை தலக்கோணம் பகுதியில் படமாக்கினர். தற்போது, மீண்டும் இப்பகுதியில் சண்டைக் காட்சிகளை படமாக்க திட்டமிட்டுள்ளனர். தொடர்ந்து 10 நாட்கள் அந்த பகுதியில் சண்டை காட்சிகளை படமாக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
« PREV
NEXT »