போதைப் பொருள் கடத்தல் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள வெலே சுதா எனப்படும் சமந்தகுமார, இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.
இதன் போது நீதிமன்ற வளாகத்தில் காவற்துறை மற்றும் அதிரடிப்படையினரின் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்ததாக எமது நீதிமன்ற செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
பண சலவை சட்டத்தின் கீழ் சட்ட விரோதமாக சொத்து சேகரித்தமை உள்ளிட்ட 57 குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளது.
எனினும் இந்த குற்றச்சாட்டுகளுக்கும் தமக்கு தொடர்பில்லை என்று வெலே சுதா நீதிமன்றத்தில் வைத்து கூறினார்.
இதனை அடுத்து இந்த வழக்கினை எதிர்வரும் மார்ச் மாதம் 23ம் திகதி விசாரணைக்கு எடுப்பதாக நீதிமன்றம் அறிவித்ததுடன், அதுவரையில் வெலே சுதாவை விளக்கமறியலில் வைத்து விசாரணைக்கு உட்படுத்தவுடம் அனுமதி வழங்கப்பட்டது.
Social Buttons