நீலப் படையணியை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ரத்து செய்துள்ளதாக வெளியான தகவல்களில் உண்மையில்லை என கட்சியின் தேசிய அமைப்பாளர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். நீலப்படையணி என்ற அமைப்பின் பெயர் மாற்றப்பட்டுள்ளதே தவிர, அமைப்பு ரத்து செய்யப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இளைஞர் அணி கடந்த காலங்களில் நீலப்படையணி என அழைக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார். எனினும், கட்சியின் யாப்பு விதிகளின் மாற்றத்தின் போது நீலப்படையணி மற்றும் மகளிர் பிரிவு ஆகியன தொடர்பில் பெயர் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இதன்படி, நீலப்படையணியின் பெயர் இளைஞர் முன்னணி எனவும், மகளிர் பிரிவின் பெயர் மகளிர் முன்னணி எனவும் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
Social Buttons