Latest News

March 01, 2015

சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட்ட இரு தேசம் ஒரே நாடு என்ற எமது கொள்கை-த.தே.ம.மு
by admin - 0

சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட்ட இரு தேசம் ஒரே நாடு என்ற எமது கொள்கையை அடைய, எமது கட்சியைக் கிராமம்தோறும் நிறுவி, புலம்பெயர்ந்துவாழும் எமது உறவுகளையும் தமிழக உறவுகளையும் ஒன்றிணைத்து போராடுவோம். 

தமிழ் தேசிய மக்கள் முன்னணி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சிகளின் வருடாந்த தேசிய மாநாடு யாழ்.கரவெட்டி பிரதேச சபை மண்டபத்தில் 28.02.2015 சனிக்கிழமை காலை 9 மணிக்கு, தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பிரசார செயலாளரும், காரைநகர், வேரப்பிட்டி சரஸ்வதி வித்தியாலயத்தின் அதிபருமான திரு சிவகுரு இளங்கோ அவர்களது தலைமையில் இடம்பெற்றது. 

ஆரம்ப நிகழ்வாக கட்சிகளின் கொடிகள் ஏற்றப்பட்டது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் கொடியினை கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் கொடியினை கட்சியின் தலைவர் இ.எ.ஆனந்தராஐh அவர்களும் ஏற்றி வைத்தனர். 

அதனைத் தொடர்ந்து தமிழ் மக்களது உரிமைப் போராட்டத்தில் உயிர் நீத்தவர்களுக்காக ஈகச் சுடரேற்றப்பட்டு அகவணக்கம் செலுத்தப்பட்டது. ஈகச் சுடரினை மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த திருமதி புவனேசசிங்கம் சரஸ்வதி அவர்கள் ஏற்றிவைத்தார். 

அடுத்த நிகழ்வாக தமிழ்த் தாய் வாழ்த்து இடம்பெற்றது. தமிழ்த் தாய்வாழ்த்தினை யாழ் வடமராட்சி மத்திய மகளீர் கல்லூரி மாணவிகளான செல்வி பாஸ்கரன் றித்திகா மற்றும் இரத்தினேஸ்வரன் யஸ்மியா ஆகியோர் பாடினர். 

சிறப்புரை ஆற்றியவர்கள்: 
1. கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரும்
2. தர்மலிங்கம் சுரேஸ்: மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர்
3. இ.எ.ஆனந்தராஜா, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் தலைவரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உபதலைவரும்
4. வவுனியா மாவட்டம் சார்பாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உபதலைவர் சிவபாதம் கஜேந்திரகுமார்: 
5. திருமதி விவேகானந்தன் இந்திராணி முல்லைத்தீவு மாவட்டம் சார்பாக 
6. இராஜகோன் ஹரிகரன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் திருகோணமலை மாவட்ட அமைப்பாளர்.
7. விஸ்வலிங்கம் திருக்குமரன் சட்டத்தரணி

நன்றியுரை:
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் செல்வராசா கஜேந்திரன் நன்றியுரை ஆறினார்

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில், கட்சியின் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன், கட்சியின் தேசிய அமைப்பாளர் மணிவண்ணன், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் தலைவர் எ.இ.ஆனந்தராஜா தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் சி. கஜேந்திரகுமார் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் த.சுரேஸ் முல்லைத் தீவு மாவட்ட அமைப்பாளர் இந்திராணி திருகோணமலை மாவட்ட அமைப்பாளர் ராஜக்கோண் கரிகரன் மற்றும் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட செயலாளர் யோகேஸ்வரன் வடக்கு, கிழக்கு மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்கள்,தொண்டர்கள், பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.

இந்த மாநாட்டின் இறுதியில் 7 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவற்றின் விவரம் வருமாறு:

01. சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட்ட இரு தேசம் ஒரே நாடு என்ற எமது கொள்கையை அடைய எமது கட்சியைக் கிராமம்தோறும் நிறுவி, புலம்பெயர்ந்துவாழும் எமது உறவுகளையும் தமிழக உறவுகளையும் ஒன்றிணைத்து போராடுவோம்.

02.தமிழ் மக்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்துவிடப்பட்ட, கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள பெரும் இன அழிப்புக்கு எதிராகச் சர்வதேச பக்கச்சார்பற்ற விசாரணையை நடத்தக்கோரி, எமது செயற்கபாடுகளை உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பெருமளவில் முன்னெடுத்தல்.

03. காணாமற்போனவர்கள், அரசியல் கைதிகள் என்பவர்களின் விடுதலையை வலியுறுத்தியும், நில அபகரிப்புக்கு எதிராகவும் பன்முகப்படுத்தப்பட்ட போராட்டங்களை முன்னெடுப்போம். 04. வடக்கு கிழக்கு இணைந்த தமிழர் தாயகத்தில் தமிழ்த் தேசியப் பேரவையை நிறுவி, தமிழ் மக்களை நிர்வகிக்கும் ஒரு நிர்வாகக் கட்டமைப்பை உருவாக்குவோம்.

05. போரினால் பாதிக்கப்பட்ட அவயவங்களை இழந்தவர்களின் வாழ்வாதாரத்தைக் கட்டியெழுப்பப் போராடுவோம். 06. புலம்பெயர்ந்துவாழும் தமிழ் மக்களின் பேராதரவுடன் வடக்கு கிழக்கில் அபிவிருத்திப்பணிகளை முன்னெடுப்பதற்கு எமக்கான பொருளாதாரக் கொள்கையை வகுத்துச் செயற்படுவோம்.

07. எமக்கான கல்விக் கொள்கை, விளையாட்டுக்கொள்கை, கலை,பண்பாட்டுக்கொள்கை, சுகாதாரக் கொள்கை என்பவற்றை உருவாக்கி முன்னெடுப்போம். ஆகிய தீர்மானங்களே நிறைவேற்றப்பட்டுள்ளன.

நன்றி.

தமிழ் தேசிய மக்கள் முன்னணி  
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்
« PREV
NEXT »

No comments