பொதுமக்கள் சந்திப்பு ஒன்றினை நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினால் நேற்றையதினம் ஞாயிற்றுக்கிழமை (08.02.2015) மாலை 1 மணி தொடக்கம் 5 மணி வரை வெகுவிமர்சையாக நடாத்தப்பட்டிருந்தது. இன் நிகழ்வு மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இன் நிகழ்வில் பல கருத்துக்கள் பொதுமக்களுடன் கலந்துரையாடப்பட்டது. அவற்றில் முக்கியமாக ஐக்கிய நாடுகளின் செயற்பாடுகள் குறித்து பிரதமர் உருத்திரகுமாரன் அவர்களால் விளக்கமளிக்கப்பட்டது. மேலும் பலரது கேள்விகளுக்கும் பிரதமரால் பதில்களும் வழங்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் 15 பாரிய திட்டங்களை பிரதமர் பணிமனை பொறுப்பாளர் பேராசிரியர் சிறீஸ்கந்தவராஐன் அவர்களால் எம்மக்களுக்கு எடுத்துரைத்து அதன் பெறுப்புக்கள் முக்கியத்துவம் பற்றி விளக்கமாக எடுத்துரைத்தார்
இதனை தொடர்ந்து பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டது. சுன்னாகத்தில் கிணற்று நீரில் எண்ணை கலக்கின்ற விடயம் பற்றி சுன்னாகத்தை சேர்ந்த இளைஞன் ஒருவரால் விபரிக்கப்பட்டது. எமது மக்களை அழிப்பதற்கு ஒரு வழிமுறையாக சிறீலங்கா அரசாங்கம் பாவிப்பதாகவும் அதன் தாக்கத்தை அவர் புத்தி ஜீவிகளுடன் ஆலோசித்ததாகவும் ஐக்கிய நாடுகள் சபையினால் மார்ச் மாதம் நடைபெறும் மனித உரிமை சபைக்கு எடுத்துரைப்பதற்காகவும் சில ஆக்கங்களை செய்துள்ளதாகவும் இதற்கு நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்குமாறும் பொதுமக்களும் இதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் கேட்டுக்கொண்டார்.
இறுதியாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் எழுச்சிப் பாடலுடன் எமது தாரக மந்திரமான தமிழரின் தாகம் தமிழீழ தாயகம் என்ற தாரக மந்திரத்துடன் இனிதே நிறைவுற்றது.
Social Buttons