ஈழத்தமிழினத்தின் மீதான சிங்கள பௌத்த பேரினவாத அரசுகளது இனஅழிப்பினை ஓர் பெரும் ஆவணமாக பதிவாக்கியுள்ள SRI LANKA: HIDING THE ELEPHANT எனும் நூல் லண்டனில் நேற்றைய தினம் வெளியிடப்பட்டிருந்தது.
சென்னைப் பல்கலைக்கழகத்தின் அரசியல் பொது நிர்வாகத் துறையின் பேராசிரியரும் தலைவருமான ராமு மணிவண்ணன் அவர்கள், ஆயிரம் பக்கங்களைக் கொண்ட இந்நூலினை படைத்துள்ளதோடு, அவரே நேரடியாக வெளியிட்டுவைத்துள்ளார். இன் நிகழ்வு Harrow Civic Centre இல் மாலை 6.30 தொடக்கம் 9.30 வரை நடைபெற்றது.
சென்னையிலும் ஜெனீவாவிலும் கனடாவிலும் என பல்வேறு முக்கிய தலைநகரங்களில் வெளியிடப்பட்டுள்ள இந்த ஆவணத்தின் லண்டன் அறிமுக நிகழ்வினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் சார்பாக அமைச்சர் பாலாம்பிகை முருகதாஸ் அவர்கள் ஏற்பாடுகளை மிகச்சிறப்பாக செய்திருந்தார்.
ஐக்கிய இராச்சியத்தின் பல அமைப்புக்கள், மனித உரிமை ஆர்வலர்கள், கல்வியாளர்கள், ஊடகவியலாளர்கள், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தொண்டர்கள் ,பொது மக்கள் என பலருக்கும் கலந்து சிறப்பித்திருந்தனர்.
Social Buttons