அரசியல், சமூக, மொழி, இன ரீதியாவும் கலாச்சார வழிமுறைகள் ரீதியாகவும் நாம் இன்னல்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளோம். பல்வேறு சந்தர்ப்பங்களில் வன்முறைகள் கட்டவிழ்க்கப்பட்டு தமிழர்கள் என்ற காரணத்தினாலே பலர் கொல்லப்பட்டனர் என வணக்கத்துக்குரிய ஆயர் இராயப்பு யோசப் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
மனித உரிமைகளை, இயற்கையோடு ஒட்டியுள்ள உரிமைகளைப் பாதுகாப்பதற்காக ஐ.நா மனித உரிமைகள் ஆணையகம் உருவாக்கப்பட்டது. அவ்வாறான கடவுளால் கொடுக்கப்பட்ட மாண்பை மதியால் மிதிக்கின்றதைத் தான் இலங்கை சுதந்திரம் பெற்ற நாளிலிருந்து நோக்குகிறோம்.
இவ்வாறு இலங்கையில் தொடர்ந்து மனித உரிமைகள் மறுக்கப்பட்டு, மிதிக்கப்பட்டு வருகின்றது. அது தொடர்பான ஐ.நாவின் விசாரணை அறிக்கை பிற்போடப்பட்டமை ஏமாற்றமளிக்கின்றது என கிளிநொச்சியில் இடம்பெற்ற நூல் வெளியீட்டு விழாவில் ஆயர் இராயப்பு யோசப் தெரிவித்துள்ளார்.
Social Buttons