நுகேகொடையில் இடம்பெற்ற இந்த கூட்டத்திற்கு பெருந்தொகையான மக்கள் வருகை தந்திருந்தனர்.
இதில் வழமைபோல வருவிக்கப்பட்ட ஒரு கூட்டம் இருந்ததா என்ற சந்தேகமும் இருந்தது. ஏனெனில் மஹிந்தவின் உருவப்படம் ஏந்திய நிறையப்பேரை காணமுடிந்தது. சாதாரணமாக கூட்டம் பார்க்க வரும் மக்கள் அவ்வாறு வருவதில்லை.
அது ஒரு திட்டமிட்டு வரவழைக்கப்பட்ட மக்கள் பகுதியே! அதுபோக சாதாரண மக்களும் பெருமளவில் இருந்தனர்.
58 லட்சம் வாக்குகளை பெற்ற ஒருவருக்கு பெளத்த மேலாதிக்கமிக்க நுகேகொடை போன்ற இடத்தில் இவ்வாறு கூட்டம் சேருவது ஆச்சரியமில்லை.
இன்றைய பிரதான பேச்சாளராகிய விமல் வீரவன்சவிற்கு வாய்க்கு அவல் கிடைத்தது போல், சிங்களவர்களை சூடாக்க சில சிறுபான்மை சார்நத விடயங்கள் உதவின.
சிவாஜிலிங்கத்தின் சிபாரிசின் பெயரில் வட மாகாண சபை நிறைவேற்றிய பிரேரணையினை ராணுவத்தை காட்டிக்கொடுக்கும் சதியென காட்டமாய் எடுத்துரைத்தார்.
வடக்கில் விடுவிக்கப்பட்ட நிலப்பரப்பில் இந்தியாவில் இருக்கும் இலங்கை அகதிகளோடு இந்திய உளவுப்படையும் குடியேறுமென பேரினவாதிகளை சூடேற்றினார்.
மனித உரிமைகள் பற்றிய விடயங்களை விசாரணைக்கு ஐ. நா தள்ளிப்போட்டமை அமெரிக்காவின் ஒரு “செட்டப் கேம்” என்றார்.
வடக்கில் எந்த நேரத்திலும் துப்பாக்கிகள் மீண்டும் வெடிக்கலாம் எனவும்,
தற்போது மௌமான இருந்த வடக்கு முதலமைச்சர் தற்போது இலங்கை இராணுவத்தினருக்கெதிராக வட மாகாண சபையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளார். இன அழிப்பு இடம்பெற்றதாகக் கூறி இராணுவத்தைக் குற்றச்சாட்டி சர்வதேச விசாரணைக்கு கொண்டுசெல்ல முயற்சிக்கின்றனர். எனினும், மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் இதனை அவர்களுக்கு செய்துகொள்ள முடியாது போனது. எனவும் இனவாதம் என்ற ஆயுதத்தை இக்கூட்டத்தில் மிகவும் சாதுரியமாக பாவித்தனர் ஆகவே ஒரு இனமுறுகளை ஏற்படுத்த இவர்கள் முயல்கிறார்கள் எனவே அனைத்து தமிழ்பேசும் மக்களும் அவதானமாக இருக்கவும்
No comments
Post a Comment