ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் கட்சியின் தேசிய அமைப்பாளராக நாடாளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேமஜயந்த, பொருளாளராக எஸ்.பி.நாவின்ன எம்.பி., ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இன்று அக்கட்சியின் நிர்வாகக் குழுக் கூட்டம் இடம்பெற்றது.
அத்துடன் அநுர பிரியதர்ஷன யாப்பா எம்.பி. பொது செயலாளராக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்னவை கட்சியின் உபதலைவராக நிறைவேற்றுக்குழு நியமித்துள்ளது.
ஏற்கனவே மகிந்த ராஜபக்ச ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் கட்சியின் தலைமை பதவியை புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசெனவுக்கு கையளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
குறிப்பிட்ட கூட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த மற்றும் சந்திரிக்கா ஆகியோர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கட்ட நிலையில் அவர்கள் இருவரும் கலந்து கொள்ளவில்லை என தெரிய வருகிறது.
No comments
Post a Comment