கைது செய்யும் நோக்கிலா புலம்பெயர் சமூகத்தை அரசாங்கம் மீள அழைக்கின்றது என முன்னணி சோசலிச கட்சியின் பிரச்சாரச் செயலாளர் புபுது ஜாகொட தெரிவித்துள்ளார்.
தமது கட்சியின் தலைவர் குமார் குணரட்னம் மீது அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
குமார் குணரட்னம் தமது விஜயம் அரசியல் நோக்கத்திலானது என தெரிவித்த போதிலும், அதிகாரிகள் சுற்றுலா வீசாவையே வழங்கியுள்ளதாக புபுது ஜாகொட தெரிவித்துள்ளார்.
வீசா சட்டங்களை மீறிச் செயற்பட்டமைக்காக குமார் குணரட்னத்தை நாடு கடத்த அதிகாரிகள் முயற்சித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
குமார் குணரட்னம் சுற்றுலாப் பயணி அல்ல என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே என அவர் தெரிவித்துள்ளார்.
குமார் குணரட்னம் விரும்பி நாட்டை விட்டு வெளியேறவில்லை எனவும் வெளியேற்றப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
புலம்பெயர்ந்தவர்களை நாடு திரும்புமாறு அண்மையில் ஊடக அமைச்சர் கோரியுள்ளதாகவும், அவர்களை கைது செய்யவா இவ்வாறு அழைக்கின்றார்கள் என ஜாகொட கேள்வி எழுப்பியுள்ளார்.
அரசாங்கம் நல்லாட்சி கொள்கைகள் கோட்பாடுகளை அமுல்படுத்தவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
Social Buttons