கடந்த 28.04.2005அன்று கொலை செய்யப்பட்ட மாமனிதர் “தராக்கி” எனும் சிவராமின் கொலை தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டு, நீண்டகாலமாக விசாரணை நடைபெற்று வந்த வழக்கின் இறுதி தீர்ப்பானது. இன்று வழங்கப்பட்டு உள்ளது…,
இத்தீர்ப்பில் “சிவராமின் கொலை தொடர்பாக நடைபெற்ற தீவிர விசாரணையின் பின், பீற்றர் எனும் ஸ்ரீஸ்கந்தராஜா மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கு எதுவித சாட்சிகளோ, ஆதாரங்களோ இல்லாதபடியால், அவரை இவ்வழக்கில் இருந்து விடுவித்து இவ்வழக்கை இவ் நீதிமன்றம் தள்ளுபடி செய்கிறது” என்று கொழும்பு மேல்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.
கொல்லப்பட்ட சிவராமுக்கு நீதி கிடைக்கவில்லை . ஈழத்து ஊடகப் பரப்பில் எத்தனையோ ஊடகவியலாளர்கள் தமது பங்களிப்பை தாம் சார்ந்த சமூகத்துக்கும் ஊடகத்துறைக்கும் வழங்கியுள்ள போதிலும், சிவராமுக்கு இணையாக எவரும் இல்லையென்றே கூறுமளவிற்கு அவரது வெற்றிடம் அவர் எமைவிட்டுப் பிரிந்து பத்து ஆண்டை கடக்கும் தருவாயிலும் இன்னமும் நிரப்பப்படாமலேயே உள்ளது.
No comments
Post a Comment