இதன் போது எதிர்வரும் பொதுத் தேர்தல் தொடர்பில் மூன்று பிரேரணைகள் முன்வைக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளன.
இதன்படி, எதிர்வரும் பொதுத் தேர்தலின் பொருட்டு சிறிலங்கா சுதந்திர கட்சியின் தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன், முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் மகிந்த ராஜபக்ஷ ஆகியோர் தலைமை ஏற்க வேண்டும் என்ற தீர்மானம் முதலில் நிறைவேற்றப்பட்டது.
இரண்டாவதாக சிறிலங்கா சுதந்திர கட்சியின் பிரதமர் வேட்பாளராக மகிந்தராஜபக்ஷ நிறுத்தப்பட வேண்டும் என்ற பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது.
அதேநேரம் மூன்றாவதாக ஐக்கிய தேசிய கட்சியை தோற்கடிப்பதற்கு கடந்த காலத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புடன் இணைந்திருந்த அனைத்து தரப்பினரும் ஒன்றிணைய வேண்டும் என்ற தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த கூட்டம் ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து மிகவும் குழப்பமான நிலை காணப்பட்டதாக, அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
No comments
Post a Comment