வடக்கு மாகாண மீன்பிடி போக்குவரத்து கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களால் முன்வைக்கப்பட்ட மாவீரர்களின் குடும்பங்கள், புனர்வாழ்வு பெற்ற போராளிகள், அரசியல் கைதிகளின் குடும்பங்கள் ஆகியோருக்கான வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வேலைத்திட்டமானது வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தினூடாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
எனவே நாளை முதல் சகல கிராம / மாதர் கிராம அபிவிருத்தி சங்கங்களிடமும் படிவங்களை பெற்று சரியான தரவுகளை பூர்த்தி செய்து எதிர்வரும் மார்ச் மாதம் 10 ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு சகல தரப்பினரையும் அமைச்சர் பணிக்கின்றார்.
இத்துடன் தரவிறக்கம் செய்யக்கூடிய இலகுவான முறையில் படிவம் இணைக்கப்பட்டுள்ளது. எனவே எனது அன்பார்ந்த ஊடக சகோதரர்களே தேவையானவர்கள் பெற்றுக்கொள்ள கூடிய இலகுவான முறையில் தரவிறக்க கூடிய வண்ணம் இதனை மக்களுக்கு கொண்டுசெல்லுமாறு தங்களிடம் அன்பாக கேட்டுக்கொள்கின்றேன்.
No comments
Post a Comment