Latest News

February 02, 2015

காணாமல் போனவர்களின் உறவுகள் இன்று கிளிநொச்சியில் போராட்டம்
by admin - 0

புதிய அரசே காணாமல் போன உறவுகள் குறித்து தீர்வினை வழங்க வேண்டும் , அரசியல் கைதிகளின்  விடுதலை தொடர்பிலும் விரைவில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கிளிநொச்சி மாவட்ட காணாமல் போனோர் அமைப்பின் ஏற்பாட்டில் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று இன்று நடைபெறவுள்ளது.     இந்தப் போராட்டமானது காலை 9மணியளவில் கிளிநொச்சி பழைய மாவட்டவட்ட செயலகத்திற்கு முன்பாக நடைபெறவுள்ளது.   

 இவ்வாறு நடைபெறவுள்ள போராட்டத்தையடுத்து அமைதியான முறையில் பேரணியான சென்று அரச அதிபரிடம் ஜனாதிபதிக்கான மகஜர் ஒன்றும் வழங்கப்படவுள்ளது.    எனவே குறித்த போராட்டத்தில் அரசியல் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களின் பிரதிநிதிகள், மதத்தலைவர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், ஊடகவியலாளர்கள் காணாமல் போன மற்றும் சிறையில் வாடும் அரசியல் கைதிகளின் உறவுகள், சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகளை ஒன்றுதிரளுமாறு ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.   

இதேபோல வவுனியா மற்றும் யாழ்ப்பாணத்திலும் பாரியளவில் கவனயீர்ப்புப் போராட்டம் நடாத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அந்தவகையில் 3ஆம் திகதி வவுனியாவிலும் , 9ஆம் திகதி யாழ்ப்பாணத்திலும் நடாத்தப்படவுள்ளது.   மன்னார் மாவட்டத்தில் அண்மையில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. 
« PREV
NEXT »

No comments